சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, அதிகாலை நேரத்தில் வீடு புகுந்து மொபைல் போன்களை திருடி வந்த பி.இ.பட்டதாரி இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த பாலவேடு பகுதியில் உள்ள வீடுகளில் தொடர் திருட்டுச் சம்பவங்கள் குறித்து போலீசாருக்குப் புகார்கள் வந்தன. அதிகாலை நேரத்தில், உள்ளாடை மட்டும் அணிந்த மர்ம நபர் ஒருவர் 5 வீடுகளில் புகுந்து மொபைல் போன்களை திருடியுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பாலவேடு வெளிவட்டச் சாலையோரப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பதுங்கியிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர் திருவண்ணாமலையைச் சேர்ந்த பி.இ. பட்டதாரி அருண் பிரசாத் (30) என்பது தெரியவந்தது. வெங்கல் பகுதியில் தனியார் தொண்டு நிறுவனத்தில் வார்டனாகப் பணியாற்றி வந்த அவர், சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, போலீசார் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்து ஐந்து மொபைல் போன்கள் மற்றும் 3 சவரன் நகைகளைப் பறிமுதல் செய்தனர்.
Read More : அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை..!! இனி இவர்களும் விண்ணப்பிக்கலாம்..!! உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு..!!