திருமணத்தை நிறுத்திவிட்டு காதலியுடன் மணமகன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள இடைக்கோடு பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம் பெண்ணின் திருமணம், கேரள மாநிலம் பாலராமபுரத்தைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் நிச்சயிக்கப்பட்டது. மேல்புறம் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இவர்களுக்கு நேற்று முன்தினம் திருமணம் நடைபெற இருந்தது. இதற்கிடையே, திருமண வரவேற்பு நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது.
ஆனால், திருமணத்திற்கு முந்தைய நாள் இரவில், மணமகனின் உறவினர்களிடம் இருந்து மணப்பெண் வீட்டாருக்கு ஒரு அதிர்ச்சியான அழைப்பு வந்தது. அந்த அழைப்பில், “மணமகன் தனது காதலியுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டதால், திருமணத்தை நிறுத்தி விடுங்கள்” என்று கூறினர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண் வீட்டார், திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நிறுத்தி, உடனடியாக போலீசில் புகார் அளிக்க முடிவு செய்தனர்.
முதலில், பாலராமபுரம் காவல் நிலையத்திற்குச் சென்ற மணப்பெண் வீட்டார், அங்கிருந்த போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில், அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தற்போது, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு மணமகன் மாயமான சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : பல பொருட்களின் விலை அதிரடியாக குறைகிறது..!! இனி இதற்கு ஜிஎஸ்டி வரி கிடையாது..!! லிஸ்ட் இதோ..!!