தமிழ்நாடு அரசின் கனவுத் திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில், புதிய விண்ணப்பதாரர்கள் சேர்க்கப்பட்டு வரும் நிலையில், ஏற்கனவே பயனாளிகளாக உள்ளவர்களில் சிலர் நீக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின்படி, மத்திய அல்லது மாநில அரசுப் பணியில் உள்ளவர்களின் குடும்பத்தினர், அத்துடன் ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் ஓய்வூதியம் பெறுபவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற முடியாது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, குரூப் 4 மற்றும் சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளது. இவர்கள் தங்கள் பணிக்கான பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டுள்ளனர். இந்த அரசுப் பணிகளில் புதிதாக இணைந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், ஏற்கனவே மகளிர் உரிமைத்தொகை பெற்று வந்தால், அவர்கள் இத்திட்டத்தில் இருந்து நீக்கப்படுவார்கள்.
இதன்மூலம், ஆயிரக்கணக்கான பெண்கள் இந்தத் திட்டத்தின் கீழ் இனி மாதந்தோறும் ரூ.1,000 பெற முடியாது. சமூகநலத்துறை அதிகாரிகள், இந்த விதிகளின் கீழ் வரும் பயனாளிகளை அடையாளம் கண்டு நீக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதன் விளைவாக, தற்போதுள்ள பயனாளிகளின் எண்ணிக்கையில் கணிசமான அளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : மாதம் ரூ.58,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு துறையில் வேலை..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?