இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள துணை மருத்துவ பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. செவிலியர், டயாலிசிஸ் நிபுணர், சுகாதார ஆய்வாளர், மருந்தாளர், கதிரியக்க நிபுணர், ECG நிபுணர் மற்றும் ஆய்வக உதவியாளர் போன்ற பல்வேறு பதவிகளில் மொத்தம் 434 காலியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர் | காலியிடங்கள் | RRB சென்னை பணியிடங்கள் |
செவிலியர் கண்காணிப்பாளர் | 272 | 43 |
சுகாதார ஆய்வாளர் | 233 | 7 |
மருந்தாளர் | 105 | 12 |
கதிரியக்க நிபுணர் | 4 | 1 |
டயாலிசிஸ் டெக்னீஷியன் | 4 | 1 |
ECG டெக்னீஷியன் | 4 | 1 |
ஆய்வக உதவியாளர் | 12 | 2 |
மொத்தம் | 434 | 67 |
வயது வரம்பு :
➢ இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
➢ வயது வரம்பில் 5 ஆண்டுகள் வரையும், ஒபிசி பிரிவில் 3 ஆண்டுகள் வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரையும் தளர்வு உள்ளது.
செவிலியர் : 3 ஆண்டுகள் பொது நர்சிங் மற்றும் மருத்துவ படிப்பு அல்லது நர்சிங் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். நர்ஸ் தகுதிக்கான பதிவு கட்டாயம்.
சுகாதார ஆய்வாளர் : வேதியியல் பாடத்துடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒரு ஆண்டு டிப்ளமோ அல்லது தேசிய தொழில்பயிற்சி சான்றிதழ் அவசியம்.
மருந்தாளர் : 12ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் பார்மசி டிப்ளமோ அல்லது பார்மசி இளங்கலை பட்டப்படிப்பு (B.Pharma) முடித்திருக்க வேண்டும்.
கதிரியக்க நிபுணர் : 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களுடன்). ரேடியோகிராஃபி/ X Ray டெக்னீஷியன்/ ரேடியோ நோய் கண்டறிதல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
டயாலிசிஸ் டெக்னீஷியன் : இளங்கலை பட்டம் + Haemodialysis டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும் அல்லது இரண்டு ஆண்டுகள் in-house பயிற்சி / அனுபவம்.
ECG டெக்னீஷியன் : ஈசிஜி ஆய்வக தொழில்நுட்பம் / இருதயவியல் / இருதயவியல் தொழில்நுட்ப வல்லுநர் / இருதயவியல் நுட்பங்களில் சான்றிதழ் படிப்பு அவசியம்.
ஆய்வக உதவியாளர் : 12ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் DMLT / மெடிக்கல் லேப் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணியின் பெயர் | சம்பளம் |
செவிலியர் | ரூ.44,900 |
சுகாதார ஆய்வாளர் | ரூ.35,400 |
மருந்தாளர் | ரூ.29,200 |
கதிரியக்க நிபுணர் | ரூ.29,200 |
டயாலிசிஸ் டெக்னீஷியன் | ரூ.35,400 |
ECG டெக்னீஷியன் | ரூ.25,500 |
ஆய்வக உதவியாளர் | ரூ.21,700 |
தேர்வு செய்யப்படும் முறை :
➢ ஆன்லைன் எழுத்துத் தேர்வு
➢ சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பக் கட்டணம் :
எஸ்சி/எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், 3ஆம் பாலினத்தவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.250 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி..?
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 08.09.2025
மேலும் விவரங்களுக்கு : Click Here
Read More : நோய்களை வேரோடு அகற்றும் அகத்தி மரம்..!! கொட்டிக் கிடக்கும் மருத்துவ குணங்கள்..!!
English Summary :
RB Paramedical Staff Recruitment 2025 : Apply Online for 434 Vacancies
The Railway Recruitment Board (RRB) has announced 434 vacancies for Paramedical Staff. Eligible candidates can apply online via the official RRB website. The last date to submit applications is September 8, 2025.