நாடு முழுவதும் தெருவோர வியாபாரிகள், ரிக்ஷா ஓட்டுநர்கள், வீட்டு பணியாளர்கள், விவசாய கூலித் தொழிலாளர்கள் மற்றும் கட்டுமானத் துறையில் உள்ளவர்கள் போன்ற கோடிக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக மத்திய அரசு ஒரு சிறப்பு ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன் (PM-SYM) எனப்படும் இந்தத் திட்டத்தின் மூலம், அந்தத் தொழிலாளர்கள் 60 வயதை அடைந்தவுடன் மாதம் ரூ.3,000 வரை ஓய்வூதியம் பெற முடியும். குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்களின் வாழ்க்கையை பாதுகாக்கும் வகையில், இந்த ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திட்டத்தின் சிறப்பம்சம் :
➢ 60 வயதை அடைந்தவுடன், இந்தத் திட்டத்தில் சேர்ந்த தொழிலாளருக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படும்.
➢ சந்தாதாரர் இறந்துவிட்டால், அவரது கணவன்/மனைவிக்கு மாதம் ரூ.1,500 வரை குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
➢ இது 50:50 பங்களிப்பு திட்டமாகும். அதாவது, சந்தாதாரர் மாதம் செலுத்தும் தொகைக்கு அதே அளவு பணத்தை மத்திய அரசு இணையாகச் செலுத்தும்.
➢ ஓய்வூதியம் என்பது வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.
யாரெல்லாம் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும்..?
➢ அமைப்புசாரா துறைகளில் (தெருவோர வியாபாரிகள், வீட்டு பணியாளர்கள், ரிக்ஷா ஓட்டுநர்கள், கட்டுமான தொழிலாளர்கள், விவசாய கூலித் தொழிலாளர்கள்) பணியாற்றுபவர்கள்.
➢ வயது 18 முதல் 40 வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
➢ மாத வருமானம் ரூ.15,000 அல்லது அதற்கு குறைவாக இருப்பவர்கள்.
➢ மேலும், NPS, ESIC, EPFO போன்ற சமூக பாதுகாப்பு திட்டங்களில் உறுப்பினராக இருக்கக் கூடாது.
➢ வருமான வரி செலுத்துபவராக இருக்கக் கூடாது.
மாதம் எவ்வளவு செலுத்த வேண்டும்..?
➢ நீங்கள் 18 வயதில் சேர்ந்தால், மாதம் ரூ.55 செலுத்த வேண்டும்.
➢ 25 வயதில் சேர்ந்தால், மாதம் ரூ.80 செலுத்த வேண்டும்.
➢ 40 வயதில் சேர்ந்தால், மாதம் ரூ.200 செலுத்த வேண்டும்.
➢ இந்த மாதாந்திர சந்தா உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி..?
➢ உங்கள் பகுதியில் உள்ள பொது சேவை மையத்திற்கு செல்லுங்கள்.
➢ ஆதார் அட்டை மற்றும் உங்கள் சேமிப்பு வங்கி கணக்கு அல்லது ஜன் தன் கணக்கு விவரங்களை எடுத்துச் செல்ல வேண்டும்.
➢ பின்னர், அங்கிருக்கும் கிராமப்புற தொழில்முனைவோர் (VLE) உங்கள் விவரங்களை பதிவு செய்து, பயோமெட்ரிக் சோதனையை உறுதி செய்வார்.
➢ முதல் மாத சந்தாவை ரொக்கமாக செலுத்த வேண்டும். பிறகு, உங்களுக்கு Shram Yogi Card மற்றும் தனிப்பட்ட ஓய்வூதிய கணக்கு எண் வழங்கப்படும்.
Read More : வெறும் ரூ.1,000 முதலீடு.. வட்டி மட்டுமே ரூ.4,04,130.. போஸ்ட் ஆபீஸின் அசத்தல் திட்டம்..
Leave a Reply