திமுக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? யாரெல்லாம் விண்ணப்பிக்கக் கூடாது..? என்பது குறித்து பலருக்கும் தெரிந்திருக்கும். இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு கட்டாயம் தேவைப்படும். அதேநேரத்தில், ரேஷன் கார்டு வைத்திருந்தாலும், அனைவராலும் விண்ணப்பிக்க முடியாது. குறிப்பாக, பொருளில்லா ரேஷன் கார்டு வைத்திருப்போர் இத்திட்டத்தின் பலனை அனுபவிக்க முடியாது.
முன்னுரிமை ரேஷன் கார்டு, முன்னுரிமையற்ற ரேஷன் கார்டு, அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு ரூ.1,000 கிடைக்கும். அதேநேரத்தில் தனிநபர் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் ரூ.1,000 உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியுமா..? என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. எனவே, அவர்களும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.
ஆனால், தமிழ்நாடு அரசு முன்பே கூறியதுபோல, உங்கள் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மேல் இருக்கக் கூடாது. சொந்த பயன்பாட்டுக்காக நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கக் கூடாது போன்ற விதிமுறைகள் உள்ளன. இந்த விதிகளை மீறி விண்ணப்பித்தாலும், உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிடும்.
எனவே, இதுதொடர்பான முழு விதிமுறைகளும் தெரிந்து கொண்டு இத்திட்டத்தில் விண்ணப்பித்தால், உங்களுக்கும் ரூ.1,000 கிடைக்கும். ஒருவேளை இதுவரை தனிநபராக இருந்து ரேஷன் அட்டை பெறவில்லை என்றால், உடனே அதற்கு விண்ணப்பிக்க வேண்டும். அந்த கார்டு உங்கள் கைக்கு வந்தவுடன் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
உங்களுக்கு தனிநபர் ரேஷன் கார்டு வேண்டுமென்றால், தற்போது தமிழ்நாடு முழுவதும் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற முகாம் நடைபெற்று வருகிறது. எனவே, அதில் கலந்து கொண்டு தனிநபர் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கலாம். அந்த கார்டு வந்ததும், மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். நீங்கள் கூறிய தகவல்கள் உண்மையாக இருந்தால், உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாதந்தோறும் ரூ.1,000 வரவு வைக்கப்படும்.
Read More : உடல் எடையை குறைக்க போறீங்களா..? இந்த 7 விஷயங்களை மட்டும் நம்பாதீங்க..!!