சென்னை மாநகராட்சியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.
நிறுவனம் : சென்னை மாநகராட்சி (Greater Chennai Corporation)
வகை : தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் : 306
பணியிடம் : சென்னை
பணியின் பெயர் : Staff Nurse, Social Worker (Psychiatric Social Worker), Psychologist (Clinical Psychologist), Vaccine Cold Chain Manager, STS (Senior Treatment Supervisor), Programme – Administrative Assistant, Hospital Worker (Multipurpose Health Worker), Security Staff
கல்வித் தகுதி : மேற்கண்ட பணிகளுக்கு ஏற்ப கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
சம்பளம் : ரூ.18,000 முதல் ரூ.23,000 வரை வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் : கிடையாது
தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பதாரர்கள் தாங்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் தொடர்புடைய சான்றிதழ்களை அஞ்சல் சேவை மூலமாகவோ அல்லது நேரிலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 15.09.2025 அன்று அல்லது அதற்கு முன் மாலை 5.00 மணி வரை சமர்ப்பிக்க வேண்டும். கடைசி தேதி மற்றும் நேரத்திற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
முகவரி : உறுப்பினர் செயலாளர் அலுவலகம், CCUHM / நகர சுகாதார அதிகாரி, பொது சுகாதாரத் துறை, 3வது தளம், அம்மா மாளிகை கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன், ரிப்பன் கட்டிடங்கள், சென்னை – 600 003
மேலும் விவரங்களுக்கு, சுகாதார அதிகாரி, பொது சுகாதாரத் துறை, ரிப்பன் கட்டிடங்கள், சென்னை – 600 003, தொலைபேசி: 044 – 2561 9330, 044 – 2561 9209 ஆகிய எண்களுக்கு வேலை நாட்களில் அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.09.2025
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here
Read More : உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வெள்ளை அரிசி சாதம் சாப்பிடக் கூடாதா..? உண்மை என்ன..?