மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL), திருச்சியில் உள்ள தனது ஆலையில் காலியாக உள்ள 760 அப்ரென்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு வேலைவாய்ப்பிற்கான விண்ணப்பங்கள் தகுதியுடைய நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்களின் விவரங்கள் :
இந்த அறிவிப்பில் மொத்தம் 760 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
பதவி: கிராஜுவேட் அப்ரென்டிஸ் (Graduate Apprentice)
காலியிடங்கள்: 120
சம்பளம்: மாதம் ரூ.12,000
கல்வித் தகுதி: பொறியியல்/தொழில்நுட்பம்/வணிகவியல்/கலை ஆகியவற்றில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவி: டெக்னீசியன் அப்ரென்டிஸ் (Technician Apprentice)
காலியிடங்கள்: 90
சம்பளம்: மாதம் ரூ.11,000
கல்வித் தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் டிப்ளமோ (Diploma) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பொது/ஓபிசி/இடபிள்யூஎஸ் பிரிவினருக்கு 60% மதிப்பெண்களும், எஸ்.சி./எஸ்.டி. பிரிவினருக்கு 50% மதிப்பெண்களும் கட்டாயம். தொலைதூரக் கல்வி, பகுதி நேரப் படிப்புகள் ஏற்றுக்கொள்ளப்படாது.
பதவி: டிரேட் அப்ரென்டிஸ் (Trade Apprentice)
காலியிடங்கள்: 550
சம்பளம்: மாதம் ரூ.11,050
கல்வித் தகுதி: என்சிவிடி (NCVT)/எஸ்.சி.வி.டி (SCVT) அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் ஐ.டி.ஐ. (ITI) முடித்திருக்க வேண்டும். வெல்டர் பணிக்கு என்சிவிடி சான்றிதழ் கட்டாயம்.
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, எஸ்.சி./எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை. தகுதியான நபர்கள், கல்வித் தகுதியின் அடிப்படையில் மெரிட் லிஸ்ட் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 28.08.2025 முதல் 15.09.2025 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு https://trichy.bhel.com/tms/app_pro/index.jsp என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
Read More : தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்..!! மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா..?