சென்னையில் வசித்து வரும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டத்தின் மூன்றாம் கட்டமாக தகுதியான பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பெண்களின் பாதுகாப்பு, அவர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. சென்னையில் பெண் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தொழில் வாய்ப்பு ஏற்படுத்துவதுடன், அவர்களின் பாதுகாப்பான பயணத்தையும் உறுதி செய்யும் பொருட்டு “இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்” வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு இளஞ்சிவப்பு ஆட்டோவிலும், காவல்துறை உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட ஜிபிஎஸ் கருதி பொருத்தப்பட்டுள்ளது. இது அவசர காலங்களில் புகாரளித்தால், காவல்துறையின் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இளஞ்சிவப்பு ஆட்டோ பெறும் பயனாளிகளுக்கு கட்டணங்கள் ஏதுமின்றி “ஊர் கேப்ஸ்” செயலி பயன்படுத்தும் வகையில் வழிவகை செய்து தரப்படும்.
கடந்த மகளிர் தினத்தன்று சென்னை மாநகரில் 250 இளஞ்சிவப்பு CNG ஆட்டோக்களை பயனாளிகளுக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் வழங்கி இத்திட்டத்தை துவக்கி வைத்தார். தற்போது 3ஆம் கட்டமாக ஆட்டோக்கள் வழங்கப்பட உள்ளது. எனவே, தகுதியான பெண்கள் 15.09.2025ஆம் தேதிக்குள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : நீங்க அடிக்கடி டீ குடிப்பவரா..? இந்த லிமிட்டை மட்டும் தாண்டாதீங்க..!! இப்படியும் குடிக்காதீங்க..!!