மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலையில் நிரந்தரப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் கீழ், இரண்டு வெவ்வேறு பதவிகளில் மொத்தம் 7 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு வேலைவாய்ப்பு என்பதால், தகுதியான நபர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 26, 2025 ஆகும்.
பதவிகள் மற்றும் கல்வித் தகுதி :
பதவி | காலியிடங்கள் | சம்பளம் | தகுதிகள் |
உதவி மேலாளர் (பாதுகாப்பு) | 01 | ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை | முழுநேர B.E./B.Tech பட்டம் மற்றும் தொழில் பாதுகாப்புப் பிரிவில் குறைந்தது 1 ஆண்டு PG டிப்ளமோ/பட்டம். அத்துடன் 2 ஆண்டுகள் மேற்பார்வையாளர் பணி அனுபவம். |
இளநிலை பொறியியல் உதவியாளர் (கொதிகலன் இயக்கம்) | 06 | ரூ.26,600 முதல் ரூ.38,920 | மெக்கானிக்கல்/எலெக்ட்ரிக்கல்/கெமிக்கல்/உற்பத்தி பிரிவுகளில் 3 ஆண்டு முழுநேர டிப்ளமோ மற்றும் First Class Boiler Attendant Certificate பெற்றிருக்க வேண்டும் |
வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. விண்ணப்பக் கட்டணம் ST/SC/Ex-s/PWD பிரிவினருக்கு இல்லை. மற்ற பிரிவினர் ரூ.600 கட்டணம் செலுத்த வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் https://sailcareers.com/ என்ற இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கூடுதல் விவரங்களை Click here என்பதை கிளிக் செய்யவும்.
Read More : கண்ணை மறைத்த கள்ளக்காதல்..!! கணவனை இரும்பு ராடால் தீர்த்துக் கட்டிய மனைவி..!! ஏற்காட்டில் பயங்கரம்..!!