கொரோனா பெருந்தொற்றால், மனிதர்களின் மூளை வழக்கத்தை விட 6 மாதங்கள் முதிர்ச்சி அடைந்திருப்பது புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் இதுதொடர்பாக ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இதில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி, பாதிக்கப்படாதவர்களின் மூளை செயல்பாடுகளும் வயதாகி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முக்கிய காரணம் கொரோனா காலத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போது, மக்கள் சந்தித்த சமூக விலகல், தனிமை, தொடர்ச்சியான மன அழுத்தம், ஒழுங்கற்ற வாழ்க்கை ஆகியவை தான். இவை அனைத்தும் மனிதர்களின் மூளையின் செயல்பாடுகளை பெரிய அளவில் பாதித்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும், இதில் ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வயதானவர்களின் நரம்புச் சிதைவு மற்றும் அறிவாற்றல் வீழ்ச்சியை மோசமாக்கியுள்ளதாகவும் பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. ஆனால், இந்த புதிய ஆராய்ச்சியில் கொரோனா தொற்றால் மக்கள் இன்னும் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது.