பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக இந்தியன் வங்கியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
வங்கியின் பெயர் : இந்தியன் வங்கி
வகை : வங்கி வேலை
மொத்த காலிப்பணியிடங்கள் : 171
பணியின் பெயர் : Specialist Officers (SO)
பணியிடம் : இந்தியா முழுவதும்
சம்பளம் : மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை வழங்கப்படும்.
காலியிடங்கள்: 171
கல்வித் தகுதி : Graduate, B.Tech/B.E, Post Graduate, CA, M.Sc, MBA/PGDM, MCA, MS, ICSI முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு : இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 23 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். மேலும் 36 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்ப கட்டணம் :
எஸ்சி/எஸ்சி உள்ளிட்ட பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.175 செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர் ரூ.1,000 செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யும் முறை :
நேர்காணல் அல்லது எழுத்துத் தேர்வு / ஆன்லைன் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி : 13.10.2025
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://indianbank.bank.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
முழு விவரங்களை தெரிந்து கொள்ள : https://indianbank.bank.in/wp-content/uploads/2025/09/23.09.2025_Final_Detailed-advertisment-for-Recruitment-of-Specialist-Officers-2025-26.pdf