டிப்ளமோ, டிகிரி முடித்திருந்தால் போதும்..!! மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் வேலை..!!

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்திற்கு உட்பட்ட புலனாய்வு துறை (Intelligence Bureau), தொழில்நுட்ப பிரிவில் ஜூனியர் புலனாய்வு அதிகாரி (Junior Intelligence Officer – JIO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மொத்த காலிப்பணியிடங்கள் : 394 (பொது பிரிவு – 157, பொருளாதாரத்தில் பின்தங்கியோர் – 32, OBC – 117, SC – 60, ST – 28)

வயது வரம்பு மற்றும் தளர்வுகள் :

குறைந்தபட்சம் 18 வயது; அதிகபட்சம் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசுத் துறையிலும் விளையாட்டு துறையிலும் பணிபுரிபவர்களுக்கு விதிவிலக்கு உண்டு. (SC/ST – 5 வருடங்கள், OBC – 3 வருடங்கள், அரசு ஊழியர்கள் – அதிகபட்சம் 40 வயது வரை, விளையாட்டு வீரர்கள் – 5 வருடங்கள் வரை,)

கல்வித்தகுதி :

டிப்ளமோ துறைகள் :

* எலெக்ட்ரானிக்ஸ்

* எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்

* எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன்

* எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ்

* தகவல் தொழில்நுட்பம்

* கணினி அறிவியல்

* கணினி பயன்பாடு

பட்டப்படிப்பு துறைகள் :

* எலெக்ட்ரிக்கல்

* கணினி அறிவியல்

* இயற்பியல்

* கணிதம்

* BCA (கணினி பயன்பாடு)

சம்பளம் : தேர்ச்சி பெறுவோர் Pay Level – 4 படியில் பணி நியமனம் பெறுவர். அடிப்படை சம்பளம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும்,பாதுகாப்பு சிறப்புத்தொகை 20%, விடுமுறை நாட்களில் பணியாற்றினால், தனி சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படு முறை :

* எழுத்துத் தேர்வு

* திறன் தேர்வு மற்றும் நேர்காணல்

* மருத்துவ பரிசோதனை

விண்ணப்பிப்பது எப்படி..?

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் https://www.mha.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 14, 2025 ஆகும்.

Read More : ஆடை உற்பத்தி அலகுகள் அமைக்க ரூ.3 லட்சம் மானியம் வழங்கும் தமிழ்நாடு அரசு..!! விண்ணப்பிப்பது எப்படி..?