காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மேவலூர் குப்பத்தை சேர்ந்தவர் பிரியாணி கடை வைத்திருக்கும் ஹரிகிருஷ்ணன். இவரது மனைவி பவானி (39). இவர், கணவருக்கு உதவியாக பிரியாணி கடையில் இருந்து வருகிறார். இந்நிலையில், ஹரிகிருஷ்ணன் பிரியாணிக்கு தேவையான இறைச்சி உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக அடிக்கடி வெளியில் சென்று வருவார்.
அப்போது, கடையில் வேலை பார்த்த மதன்குமார் (29) என்பவருக்கும் பவானிக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில், இருவரும் தனிமையில் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவரம் அறிந்த ஹரிகிருஷ்ணன், பிரியாணி கடையில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணித்து வந்துள்ளார்.
இதில் மனைவி பவானியும், மதன் குமாரும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் இருந்தது. இதையடுத்து, மனைவியை கண்டித்த ஹரிகிருஷ்ணன், மதன்குமாரை வேலையில் இருந்து நிறுத்திவிட்டார். இதனால், இருவரும் சந்தித்துக் கொள்ள முடியாமல் தவித்து வந்துள்ளனர். இந்த சூழலில் தான், தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் ஹரிகிருஷ்ணனை கொலை செய்த மதன்குமார் திட்டமிட்டுள்ளார்.
மேலும், வாய்ப்பு கிடைத்தபோது இதுபற்றி இருவரும் பேசியுள்ளனர். அதன்படி, திருவாரூர் பகுதியைச் சேர்ந்த கூலிப்படையினரை அணுகி ரூ.15 லட்சம் பேரம் பேசி ரூ.2 லட்சம் முன்பனம் கொடுத்தனர். இந்நிலையில், ஹரிகிருஷ்ணன் வழக்கம்போல் மனைவியுடன் பிரியாணி கடைக்கு சென்று வந்துள்ளார்.
மேவலூர் குப்பம் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஹரிகிருஷ்ணனை கூலிப்படையை சேர்ந்தவர்கள் கார் ஏற்றி கொலை செய்ய முயன்றனர். ஆனால், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
பின்னர், கூலிப்படையினர் ஹரிகிருஷ்ணனை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். “உன் மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து உன்னை கொலை செய்ய ரூ.15 லட்சம் பேரம் பேசியுள்ளார். முன்பணமாக ரூ.2 லட்சம் கொடுத்துள்ளார். நீ எங்களுக்கு ரூ.5 லட்சம் கொடுத்தால் உன்னை உயிரோடு விட்டு விடுகிறோம்” என்று மிரட்டியுள்ளனர்.
இதைக் கேட்டு ஆடிப்போன ஹரிகிருஷ்ணன், இதுபற்றி ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ஹரிகிருஷ்ணனின் மனைவி பவானி, அவரது கள்ளக்காதலன் மதன்குமார் ஆகியோரை பிடித்து கூலிப்படையினர் குறித்து விசாரித்தனர். அதன்படி, விக்னேஷ், விஜய், மணிகண்டன் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
Read More : நீங்கள் விரும்பி சாப்பிடும் தக்காளி கெட்ச் அப் எவ்வளவு ஆபத்தானது தெரியுமா..? என்னென்ன கலக்கப்படுகிறது..?