ஒரு மாதத்திற்கு சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால் உடலில் என்ன மாற்றம் நடக்கும்..? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

சர்க்கரை உடலுக்கு தீங்கானது என்பது அனைவருக்கும் தெரியும். அதை முற்றிலும் தவிர்ப்பது பலருக்கும் கஷ்டம் தான். ஆனால், ஒரு மாதத்திற்கு சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் தெரியுமா..?

உடலுக்கு தேவையான அளவை விட அதிக சர்க்கரை எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். அதிலும் நீங்கள் நீரிழிவு நோயாளியாகவோ அல்லது உடல் பருமனான நோயாளியாகவோ இருந்தால், நீங்கள் சர்க்கரையை தொடவேக் கூடாது. நீங்கள் சர்க்கரையை எடுத்துக் கொள்வதால், உடலில் உள்ள உறுப்புகள் மெதுவாக வேலை செய்வதை நிறுத்திவிடும்.

பொதுவாக சர்க்கரை சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு சேரும். இது மிகவும் ஆபத்தானது. சர்க்கரை நேரடியாக மட்டுமல்லாமல், சாக்லேட், பிஸ்கட், பேக்கரி பொருட்கள், ஜங்க் உணவுகள் போன்றவற்றின் மூலமும் உட்கொள்ளப்படுகிறது. எனவே, இது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கிறது. இந்நிலையில், ஒரு மாதம் சர்க்கரையில் இருந்து விலகி இருந்தால் என்ன நடக்கும் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

கல்லீரல் ஆரோக்கியம் :

அதிக சர்க்கரை சாப்பிட்டால், கல்லீரலைச் சுற்றி கொழுப்பு உருவாகும். இதனால் கல்லீரல் செயல்பாடுகள் சீர்கெடுகிறது. ஆனால், ஒரு மாதம் சர்க்கரையை தவிர்த்தாலே, கொழுப்பு குறைந்து கல்லீரல் மீண்டும் இயல்பு நிலையில் இயங்கத் தொடங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக இருந்தால் தான், உடலின் அனைத்து உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும்.

சிறுநீரகம் ஆரோக்கியம் :

அதிக சர்க்கரை எடுத்துக் கொள்ளும்போது, சிறுநீரகங்களில் வேலைப்பளு அதிகரிக்கிறது. இன்சுலின் அளவுகளும் கூட அதிகரித்து, சிறுநீரகங்களை சோர்வடையச் செய்கின்றன. நீங்கள் ஒரு மாதம் சர்க்கரை சாப்பிடவில்லை என்றால், சிறுநீரகங்கள் ஓய்வெடுக்கும். இதனால், அவற்றின் செயல்பாடு மேம்படும்.

தமனிகளில் வீக்கம் குறையும் :

தினமும் சர்க்கரை உட்கொள்பவர்களுக்கு தமனிகளின் சுவர்களில் வீக்கம் ஏற்படும். இதனால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற ஆபத்துகள் உருவாகின்றன. ஒரு மாதத்திற்கு சர்க்கரையை தவிர்ப்பதன் மூலம் இந்த வீக்கம் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். இதய ஆரோக்கியமும் மேம்படும்.

பற்கள் வலிமை :

பற்களுக்கு தீங்கு விளைவிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது சர்க்கரை தான். அதிகமாக சர்க்கரை எடுத்துக் கொண்டால், ஈறு நோய் அபாயம் அதிகரிக்கும். இது வாயில் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறது. எனவே, சர்க்கரையை தவிர்த்தால், பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் :

சர்க்கரை உடலில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களின் செயல்பாட்டை மந்தமாக்கும். ஒரு மாதத்திற்கு சர்க்கரையை தவிர்த்தால், இந்த அணுக்கள் தங்கள் முழு திறனுடன் செயல்படத் தொடங்கும். இது நோய்கள் எதிர்த்து நிற்கும் சக்தியை அதிகரிக்கிறது.

Read More : எஸ்பிஐ வங்கியில் 5,180 காலியிடங்கள்..!! டிகிரி முடித்திருந்தால் போதும்..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..?