அரியலூர் மாவட்ட வருவாய் அலகில் காலியாகவுள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் : வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
பணியின் பெயர் : கிராம உதவியாளர்
வகை : தமிழ்நாடு அரசு வேலை
மொத்த காலியிடங்கள் : 21 (அரியலூர் – 7, செந்துறை – 4, உடையார்பாளையம் – 9, ஆண்டிமடம் – 1)
சம்பளம் : மாதம் ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை வழங்கப்படும்.
தகுதி :
➣ 10ஆம் வகுப்பு படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
➣ விண்ணப்பதாரர் அந்த வட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
➣ தமிழில் பிழையின்றி எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
➣ காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது வரம்பு :
➣ BC, BC (M), MBC/DNC, SC, SC(A), ST – 21 வயது நிரம்பி இருக்க வேண்டும். 37 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது.
➣ மாற்றுத்திறனாளிகள் 21 வயதுக்குள்ளும், 42 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
➣ இதர வகுப்பினர் 21 வயதுக்குள்ளும், 32 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை :
➣ நேர்காணல்
➣ சான்றிதழ் சரிபார்ப்பு
➣ மிதிவண்டி/இருசக்கர வாகனம் ஓட்டும் திறன், எழுதுதல் மற்றும் வாசிப்பு திறன்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.09.2025
விண்ணப்பிப்பது எப்படி..?
https://ariyalur.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பின்னர், அதை முழுமையாக பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்கள் :
அரியலூர் மாவட்டம் – Click here
செந்துறை – Click here
உடையார்பாளையம் – Click here
ஆண்டிமடம் – Click here
விண்ணப்ப படிவம் – Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here
Read More : உடல் எடையை குறைக்க போறீங்களா..? இந்த 7 விஷயங்களை மட்டும் நம்பாதீங்க..!!