மாதம் ரூ.35,000 சம்பளத்தில் கிராம உதவியாளர் வேலை..!! 2,200 + காலியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழ்நாடு வருவாய் துறை தற்போது 2025ஆம் ஆண்டுக்கான கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 2,299 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://tndistricts.nic.in/ என்ற மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களின் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் இருந்து PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது.

திருவாரூர், திண்டுக்கல், கரூர், திருப்பத்தூர், சிவகங்கை, திருச்சி , திருவள்ளூர், விருதுநகர், தருமபுரி, நாமக்கல் , செங்கல்பட்டு, ஈரோடு, பெரம்பலூர், ராணிப்பேட்டை, சேலம், காஞ்சிபுரம், தூத்துக்குடி , திருப்பூர், திருவண்ணாமலை, மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, தென்காசி, வேலூர், கோவை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு மட்டுமே தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கிராம உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இணையதள பக்கத்திற்குச் சென்று ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நிர்ணயிக்கப்பட்ட தேதி மற்றும் அறிவிப்பை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

தகுதி விவரங்கள் :

* கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* தமிழில் எழுதவும், வாசிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

* விண்ணப்பதாரர் அந்தந்த வட்டத்தில் (Taluk) வசிக்க வேண்டியது கட்டாயம்.

* விண்ணப்பிக்கும் வட்டத்தில் நிரந்தரமாக வசிக்கும் நபராக இருக்க வேண்டும்.

* காலிப்பணியிடம் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அந்த கிராமத்துக்கான பணிக்கு முன்னுரிமை பெறுவர்.

வயது வரம்பு :

* பொது வகுப்பினர் (UR Applicants) : 21 முதல் 32 வயது வரை

* பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் (BC / MBC / SC / SCA / ST) : 21 முதல் 37 வயது வரை

* மூத்த குடிமக்கள் / மாற்றுத் திறனாளிகள் (PWD Applicants) : 21 முதல் 42 வயது வரை

சம்பளம் : ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை :

* எழுத்துத் தேர்வு

* நேர்முகத் தேர்வு

* சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்ப படிவத்தை நன்கு பூர்த்தி செய்து, தேவையான ஆதார ஆவணங்களுடன், உங்களது தாலுகா வருவாய் அலுவலரிடம் (Tahsildar Office) தனிப்பட்ட முறையிலும் அல்லது அஞ்சல் மூலமாகவும் சமர்ப்பிக்கலாம்.

Read More : ”இனி ஜிபேவில் பணம் அனுப்ப PIN நம்பர் தேவையில்லை”..? வருகிறது சூப்பர் அம்சம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *