தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் முதற்கட்ட அரசியல் சுற்றுப்பயணம் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி திருச்சியில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கவுள்ள விஜய், இதற்காக திருச்சி மாநகர போலீஸ் ஆணையரிடம் அனுமதி கேட்டபோது, அது மறுக்கப்பட்டுள்ளது. இதனால், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், விஜய்யின் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
விஜய்யின் சுற்றுப்பயணம் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தச் சுற்றுப்பயணம் அனைத்தும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுப்பயண அட்டவணை :
செப்டம்பர் 13: திருச்சி, பெரம்பலூர், அரியலூர்
செப்டம்பர் 20: நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை
அக்டோபர் 4, 5: கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு
அக்டோபர் 11: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை
அக்டோபர் 25: தென் சென்னை, செங்கல்பட்டு
நவம்பர் 1: கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர்
நவம்பர் 8: திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்
நவம்பர் 15: தென்காசி, விருதுநகர்
நவம்பர் 22: கடலூர்
நவம்பர் 29: சிவகங்கை, ராமநாதபுரம்
டிசம்பர் 6: தஞ்சாவூர், புதுக்கோட்டை
டிசம்பர் 13: சேலம், நாமக்கல், கரூர்
டிசம்பர் 20: திண்டுக்கல், தேனி, மதுரை
எதிர்க்கட்சிகள் விமர்சனம்
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததில் இருந்து, அவர் மக்களை நேரடியாகச் சந்திக்காமல் அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் போன்றோரைத் தனது பனையூர் அலுவலகத்திற்கு அழைத்துச் சந்தித்தது கூட விமர்சனத்திற்கு உள்ளானது. இந்தச் சூழலில், விஜய்யின் சுற்றுப்பயண அட்டவணை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே அமைக்கப்பட்டிருப்பது, “வீக் எண்ட் பாலிடிக்ஸ்” என திமுக உள்ளிட்ட கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
Read More : மத்திய அரசின் BHEL நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! தேர்வு கிடையாது..!! மாதம் எவ்வளவு சம்பளம்..?