கட்டணமில்லா இலவச மின்சாரம் வழங்குவது குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் விவசாயிகளின் நீர்பாசன வசதிக்காக இலவச மின்சாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது, விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான செய்தியை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவசமாக இரு மாதங்களுக்கு 750 யூனிட்டில் இருந்து 1,000 யூனிட்டுகளாக உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 1,37,512 விசைத்தறி நுகர்வோர்கள் பயனடைந்து வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின்சாரம் தமிழ்நாடு உற்பத்தி மற்றும் விநியோகக் கழகத்தால் (TANGEDCO) வழங்கப்படுகிறது.
அதேபோல, விவசாயிகளின் நீர்பாசன வசதிக்காக இலவச முன்முனை மின்சாரத்தினை 24 மணி நேரமும் வழங்கி வருகிறது. 2025இல் 50 ஆயிரம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில், அதற்கான நிதியும் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது. ஆனால், இது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
இலவச மின் இணைப்பு வழங்க தாமதம் ஏன்..?
இலவச மின் இணைப்பு மின்சாரத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ.7,000 கோடி செலவழித்து வருகிறது. இந்த மின் செலவுகள் அதிகமானதால் மின் இணைப்புகள் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
Read More : 100 நாட்களை கடந்தும் ஓயாத குரல்..!!கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்..!! குறுக்குப்பாறையூரில் நூதன போராட்டம்..!!