”இனி ஜிபேவில் பணம் அனுப்ப PIN நம்பர் தேவையில்லை”..? வருகிறது சூப்பர் அம்சம்..!!

யுபிஐயில் பயனர்களின் வசதியை மேம்படுத்தும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை தேசிய கொடுப்பணவு கழகம் (UPI) கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யுபிஐ பரிவர்த்தனைகளை இன்னும் பாதுகாப்பாகவும், எளிதாகவும் பயன்படுத்த புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வது பற்றி தேசிய கொடுப்பணவு கழகம் ஆலோசனை நடத்தி வருகிறது. அதாவது, யுபிஐ பணப் பரிமாற்றத்தின்போது, 4 அல்லது 6 இலக்க பின் நம்பரை பயன்படுத்தாமல் முகம் அல்லது கைரேகை உதவியுடன் பணம் அனுப்பும் முறை கொண்டு வரப்பட உள்ளது. இதனால், பயனர்கள் UPI பணப் பரிவர்த்தனைகளை மிக எளிதாகவும், விரைவாகவும் செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, ஒவ்வொரு யுபிஐ பரிவர்த்தனைக்கும் பயனர்கள் பின் நம்பரை (PIN) உள்ளிட வேண்டிய அவசியம் உள்ளது. இது முதியவர்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் குறைந்த அனுபவம் உள்ளோருக்கு பின் நம்பரை நினைவில் வைக்க சிரமமாக இருக்கிறது. அதேபோல், பின் நம்பரை மற்றவர்கள் தவறாக பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடாகத்தான் முகம் அல்லது கைரேகை மூலம் பணம் அனுப்பும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம், பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள முன் கேமரா (front camera) அல்லது அங்கீகாரம் செய்யும் கைரேகை சென்சார் மூலம், முகம் (Face ID) அல்லது கைரேகை (Fingerprint) அடையாளத்தைப் பயன்படுத்தி யுபிஐ பரிவர்த்தனைகளை செய்து கொள்ள முடியும்.

பின் நம்பரை டைப் செய்ய வேண்டிய தேவை இருக்காது. பரிவர்த்தனை வேகமாகவும், எளிதாகவும் நடைபெறும். குறிப்பாக, பாதுகாப்பாக இருக்கும். மேலும், இதனுடன் பயனர்களின் அனுபவம் மேம்படும் என்றும் மோசடி வாய்ப்பும் குறையும் என்று யுபிஐ தெரிவித்துள்ளது. இதுவரை இந்த மாற்றத்தைப் பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், இத்திட்டம் பரிசீலனை கட்டத்தில் உள்ளது.

English Summary :

UPI Without PIN? Biometric and Face Recognition Set to Shape the Future of Payments..!!

UPI has revolutionized digital payments in India. Now, NPCI is exploring biometric authentication like face recognition or fingerprints to replace PINs, aiming to make transactions more secure and user-friendly.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *