நீங்கள் உயர்ந்த சம்பளம் மற்றும் பதவி உயர்வு வாய்ப்புகள் உள்ள அரசு வங்கி வேலையை தேடுகிறீர்களா? அப்படியென்றால், இது உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு முக்கிய செய்தியாக இருக்கலாம். ஏனென்றால், யூனியன் வங்கி (Union Bank of India) இந்தாண்டுக்கான Wealth Manager பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. மொத்தம் 250 இடங்கள் காலியாகவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தப் பணியிடங்கள், ஏற்கனவே Wealth Management துறையில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்ற நபர்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளன. இது ஒரு முன்னணி அரசு வங்கியில் பணிபுரிவதற்கான வாய்ப்பாக உள்ளது. அதிக சம்பளம் மற்றும் அரசு வேலைவாய்ப்பின் அனைத்து நலத்திட்டங்களையும் கொண்டுள்ளது.
நிறுவனம் : Union Bank of India
வகை : வங்கி வேலை
பதவியின் பெயர் : Wealth Management
காலியிடங்கள் : 250
பணியிடம் : இந்தியா முழுவதும்
கல்வித் தகுதி :
➣ அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனங்களில் 2 ஆண்டுகள் முழுநேரமாக MBA/MMS/PGDBA/PGDBM/PGPM/PGDM ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒரு பட்டம் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
➣ மேலும் NISM, IRDAI, NCFM, அல்லது AMFI போன்ற சான்றிதழ்கள் கட்டாயமல்ல. ஆனால், அவை இருந்தால் விண்ணப்பதாரருக்கு கூடுதல் மதிப்பை அளிக்க வாய்ப்பு உள்ளது.
வயது வரம்பு : 25 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு வயதில் தளர்வுகள் உண்டு.
விண்ணப்பக் கட்டணம் :
எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.177 விண்ணப்பக் கட்டணமாகவும், மற்ற பிரிவினர் ரூ.1,180 கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை :
➣ ஆன்லைன் எழுத்துத் தேர்வு (Online Examination)
➣ குழு விவாதம் (Group Discussion – GD)
➣ தனிப்பட்ட நேர்முகத்தேர்வு (Personal Interview)
மாத சம்பளம் : ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி..?
www.unionbankofindia.co.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.08.2025
மேலும் விவரங்களுக்கு : https://www.unionbankofindia.co.in/pdf/Notification-for-Recruitment-of-Wealth-Managers.pdf
Read More : இதுதான் பிளாஸ்டிக் எண்ணெய்யா..? இதை சாப்பிட்டா அவ்வளவு தான்..!! வைரலாகும் வீடியோ
Leave a Reply