பவானியில் கள்ளக்காதலர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகராஜ் – விஜயா தம்பதி. இந்த தம்பதியினருக்கு 16 வயதில் மகளும், 11 வயதில் மகனும் இருக்கின்றனர். இந்நிலையில், கணவர் நாகராஜ் பவானி காவல் நிலைய குடியிருப்புக்கு எதிரே உள்ள பட்டறையில் வேலை பார்த்து வந்துள்ளார். இதற்கிடையே, நேற்று விஜயா மட்டும் வீட்டில் தனியாக இருந்த நிலையில், அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.
மேலும், அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி சிதறி கிடந்துள்ளது. மேலும், கிரைண்டர் குழவி கல், மிளகாய் பொடி, அரிவாள்மனை ஆகியவையும் சம்பவ இடத்தில் இருந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த நாகராஜ், உடனே போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், விஜயாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் நாகராஜின் வீட்டருகே இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, நாகராஜுடன் வேலை பார்த்து வந்த மோகன் என்பவர் விஜயா தனியாக இருக்கும்போது வீட்டிற்கு நுழைந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை பிடித்து விசாரித்ததில், விஜயாவுக்கும் மோகனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.
சம்பவத்தன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த மோகன், விஜயாவின் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். கல்லால் தாக்கிய கொலை செய்துள்ளார். பின்னர், தனது சட்டையில் படிந்திருந்த ரத்தக்கரையை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்துவிட்டு, எப்போதும் போல பட்டறைக்கு வேலைக்கு சென்றது தெரியவந்தது. இந்நிலையில், மோகனை கைது செய்த போலீசார், விஜயாவை என்ன காரணத்திற்காக கொலை செய்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
Read More : ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு மிரட்டல் விடுத்த எடப்பாடி பழனிசாமி..!! அடுத்த முறை வந்தால் இதுதான் நடக்கும்..!!