தவெகவின் 2-வது மாநாட்டுக்கு அடுத்தடுத்து வரும் சிக்கல்.. திடீரென தேதியை மாற்றச் சொன்ன காவல்துறை..

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு வரும் 25ஆம் தேதி மதுரையில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 17ஆம் தேதி அங்கு பந்தல்கால் நடும் பணி நடைபெற்றது. மேலும், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மாநாடு நடத்துவது தொடர்பாக அனுமதி கேட்டு, தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மனு அளித்தார்.

இதையடுத்து, தவெக மாநாட்டின் ஏற்பாடுகள் பாரபத்தி பகுதியில் நடைபெற்று வருகிறது. ஆனால், வரும் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட இருப்பதால், மாநாடு தேதியை மாற்றுமாறு தவெகவிடம் காவல்துறை தெரிவித்தது. இதனால், வரும் 17ஆம் தேதி மாநாடு நடத்த அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், சுதந்திர தினத்தை காரணம் காட்டி, அனுமதி தர காவல்துறை மறுத்துவிட்டது.

எனவே, வார இறுதி நாட்கள் அல்லாமல் 18 முதல் 22ஆம் தேதிக்குள் ஏதாவது ஒரு நாளை தேர்வு செய்யுமாறு தவெகவினரிடம் காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், தவெக மாநாடு தேதி தொடர்பான புதிய மனுவை காவல்துறையிடம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் மாநாடு நடைபெறும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : எடப்பாடியில் மாணவிகளிடம் சில்மிஷம்.. புகாரை மறைத்த 4 ஆசிரியைகள் மீதும் பாய்கிறது நடவடிக்கை..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *