“உங்கள் உடல்நலம் பற்றி நீங்கள் கடைசியாக எப்போது சிந்தித்தீர்கள்?”… வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் உடல் நலம் என்பது மனிதனின் முதன்மையான சொத்தாக மாறுகிறது. குறிப்பாக, 40 வயதுக்கு பிறகு, பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் நமக்கு வரும். ஆனால், அதை முறையான மருத்துவ பரிசோதனைகள் மூலம் முன்கூட்டியே கண்டறிந்து கட்டுப்படுத்துவது தற்போது சாத்தியமாகிறது. இந்த நிலையில், மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கும் முக்கிய 7 பரிசோதனைகள் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
இரத்த அழுத்த சோதனை (Blood Pressure Test) :
45 வயதுக்கும் மேற்பட்டோருக்கு உயர் ரத்த அழுத்தம் என்பது மிகவும் பொதுவானது. ஆனால், பெரும்பாலானோர் அதை அறியாமல் இருக்கின்றனர். இதை சரியாக கட்டுப்படுத்தாவிட்டால், இதய நோய்கள், சிறுநீரக சிக்கல்கள் போன்ற பிரச்சனைகள் உருவாகலாம்.
இரத்த சர்க்கரை சோதனை (Blood Sugar Test) :
இந்தியாவில் முதியவர்களில் 60% பேர் நீரிழிவு (Diabetes) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். குடும்பத்தில் இந்த நோய்க்கு வரலாறு இல்லாதவர்களும், கண்டிப்பாக ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஏனெனில், ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்தால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த மிகவும் எளிதாக இருக்கும்.
கொலஸ்ட்ரால் பரிசோதனை (Cholesterol test) :
இந்த பரிசோதனை செய்வதன் மூலம் இரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவை அறிய முடியும். இதில் LDL, HDL, Triglycerides போன்றவை உள்ளன. உயர் கொழுப்பு அளவு, இதயக் கோளாறுகளுக்கு முக்கிய காரணமாக இருப்பதால், இந்த சோதனையை கட்டாயம் தவிர்க்கக் கூடாது. குறிப்பாக, இளைஞர்கள் 6 மாதங்களோ அல்லது ஆண்டுக்கு ஒருமுறையோ கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்வது நல்லது.
மூளை மற்றும் நினைவாற்றல் சோதனை (Cognitive Function Test) :
வயதானவர்கள் நினைவாற்றல் குறைதல், அல்சைமர், டிமென்ஷியா போன்ற நினைவுத்திறன் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வாய்ப்பு அதிகம். இவ்வாறான நோய்கள் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால், பராமரிப்பு மற்றும் சிகிச்சை அளிக்க முடியும். இது நோயின் தாக்கத்தை குறைத்து, வாழ்நாளை மகிழ்ச்சியாக செலவிட உதவும்.
மார்பக புற்றுநோய் (Mammography) :
பெண்கள் 40 வயதுக்கு பிறகு, மார்பக புற்றுநோயைக் கண்டறிய ‘மாமோகிராஃபி’ (Mammography) சோதனையும், கருப்பை புற்றுநோயைக் கண்டறிய ‘பாப் ஸ்மியர்’ (Pap Smear) சோதனையும் செய்வது அவசியமாகும். இந்த நோய்கள் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்பட்டால், சிகிச்சை வெற்றிகரமாக இருக்க வாய்ப்பு அதிகம்.
கிட்னி பரிசோதனை (Kidney Function Test) :
இரத்த அழுகல் சோதனை (Complete Blood Count – CBC) மற்றும் சிறுநீரக செயல்பாடு சோதனை (Kidney Function Test) ஆகியவை உடல் முழுவதுமாக இயங்குகிறதா என்பதை அறிய உதவுகின்றன. 50 வயதுக்கு பிறகு இந்த சோதனைகள் வழக்கமான இடைவெளியில் செய்யப்பட வேண்டும்.
முதியவர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் என்பது வெறும் சோதனை அல்ல. அவர்களின் வாழ்க்கைத் தரத்தை பாதுகாக்கும் ஒரு முக்கியமான பாதுகாப்பு முறை ஆகும். பல நோய்கள் ஆரம்ப கட்டத்தில் எதுவும் தெரியாமல் இருக்கலாம். ஆனால், சரியான நேரத்தில் சோதனை செய்தால் அந்த நோய்கள் தீவிரம் அடைவதையும் தவிர்க்கலாம். உடல் நலத்தையும் வாழ்க்கையின் மகிழ்ச்சியையும் தக்க வைத்துக் கொள்ளலாம்.
இப்போது உடல்நலம் குறித்து விழிப்புணர்வு கொண்ட மூத்த குடிமக்கள், ஆண்டுக்கு ஒருமுறை அனைத்து முக்கிய மருத்துவ பரிசோதனைகளையும் செய்வது, எதிர்காலத்தில் பெரும் சிக்கல்களில் இருந்து தப்பிக்க உதவும். இதற்காக சில தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் சலுகைகள் கூட வழங்கி வருகின்றன. “விழிப்புணர்வே உயிரைக் காக்கும் கவசம்”… இதைப் புரிந்துகொண்டு, உங்கள் குடும்பத்தினருடனும் இந்த செய்தியை பகிருங்கள்.
Read More : குறைந்தது நீர்வரத்து..!! மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக திறக்கப்படும் நீர் நிறுத்தம்..!!
English Summary :
The 40+ Health Checklist : 7 Tests That Could Save Your Life..!!
After the age of 40, regular health checkups become essential. Many serious conditions like diabetes, high blood pressure, and cancer develop suddenly. This article highlights 7 medical tests that help detect issues early, manage health better, and ensure a longer, healthier life.
Leave a Reply