தமிழ்நாடு அரசு சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், தனிநபர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.25 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் கடனைத் திருப்பிச் செலுத்தலாம். இந்த கடன் திட்டத்தை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் செயல்படுத்துகிறது.
தனிநபர் கடனுக்கான தகுதிகள் :
* இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் அல்லது சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
* விண்ணப்பிப்போரின் வயது 18 முதல் 60-க்குள் இருக்க வேண்டும்.
* குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
* சிறு வர்த்தகம், விவசாயம், கைவினைப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்.
வட்டி விகிதம் :
ரூ.1.25 லட்சம் வரை : ஆண்டுக்கு 7% வட்டி.
ரூ.1.25 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை : ஆண்டுக்கு 8% வட்டி.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன் :
* மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். திட்ட அலுவலர் மூலம் தரச்சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
* ஒரு குழுவுக்கு அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரையும், ஒரு குழு உறுப்பினருக்கு ரூ.1.25 லட்சம் வரையும் கடன் வழங்கப்படும்
* ஒரு குழுவில் 20 உறுப்பினர்கள் வரை இருக்கலாம். ஆண் மற்றும் பெண் இருவரும் இந்தக் கடனைப் பெற முடியும்.
விண்ணப்பிப்பது எப்படி..?
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்கள் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அல்லது கூட்டுறவு வங்கிக் கிளைகளில் விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும், www.tabcedco.tn.gov.in என்ற இணையதளத்திலும் படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். அதேபோல், உங்கள் ஊரில் நடக்கும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களுக்கு சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நேரில் சமர்ப்பிக்கலாம்.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் கார்டு, தொழில் திட்ட அறிக்கை மற்றும் வங்கிகள் கேட்கும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். எனவே, தகுதியுடையவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சுயதொழில் தொடங்கி முன்னேறலாம்.
Read More : விவசாயிகளே..!! ஆடு, மாடு, கோழி பண்ணை அமைக்க மானியம்..!! பயிற்சியும் உண்டு..!! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க..!!