தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுத் துறையின் கீழ் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் விவசாயக் கடன், தொழில்முனைவோர் கடன், அவசர தேவைக்கான கடன், நகைக்கடன் போன்ற பல்வேறு நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன. இத்தகைய மக்கள் நல சேவைகள் வழங்கும் கூட்டுறவு அமைப்புகளில் தற்போது பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த நிலையில், சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்க, காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வந்தது. இந்த சூழலில் தான், தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்க பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது, கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள 2,000 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு வரும் 29ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு செப்டம்பர் 5ஆம் தேதி ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு, செப்.12ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. இதன் தேர்வு முடிவுகள் அக்டோபர் 27ஆம் தேதி வெளியிடப்பட்டு, நவம்பர் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நேர்காணல் நடத்தி இறுதி முடிவு நவம்பர் 15ஆம் தேதி வெளியிடப்படும்” அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More : தமிழ் மொழி தெரிந்தால் போதும்.. இந்தியன் வங்கியில் வேலை.. மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
Leave a Reply