தெருவோர உணவுக் கடை ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள இந்தக் கடையில், பக்கோடாக்கள் பொரிக்க பயன்படுத்தப்படும் எண்ணெய் தொடர்பான வீடியோ தான் தற்போது வைரலாகி நெட்டிசன்கள் மக்கள் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், “இது விஷம் கொடுப்பதற்கு சமம்” என்று கடுமையாக விமர்சித்தும், கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர்.
இதுதொடர்பான அந்த வீடியோவில், அந்த கடைக்காரர் முழு பிளாஸ்டிக் எண்ணெய் பாக்கெட்டுகளை கத்தியால் அறுக்காமல், அப்படியே வாணலியில் இருக்கும் கொதிக்கும் எண்ணெய் பாத்திரத்தில் போடுகிறார். அது சில நொடிகளில் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை உருக்கிவிடுகிறது. ஆனால், அந்த பிளாஸ்டிக் அதே எண்ணெய்யில் கலந்து விடுகிறது. இந்த செயலைப் பார்த்த உணவுப் பதிவாளர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் இணையவாசிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், இந்த செயலால் டையாக்ஸின், பிபிஏ, ஸ்டைரீன் போன்ற நச்சு ரசாயனங்கள் அந்த உணவில் கலக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது கேன்சர், சிறுநீரக பாதிப்பு, மகப்பேறு பிரச்சனை, குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைபாடுகள் போன்றவற்றை ஏற்படுத்தக் கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வு, தெருவோர உணவுக் கலாச்சாரத்தின் பின்னால் மறைந்திருக்கும் உண்மையை வெளிக்கொண்டு வருகிறது. சுகாதாரம் என்பது நமது விருப்பத்தின் பேரில் செய்வது அல்ல.. கட்டாயம் பின்பற்ற வேண்டிய ஒரு பொறுப்பு. ஒருவர் சமைக்கும் உணவு, மற்றொருவரின் உடல்நலத்தையும், வாழ்க்கையையும் நேரடியாக பாதிக்கக் கூடியது. எனவே, உணவுத் தயாரிப்பில் ஈடுபடுவோர் அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும், மிகவும் பொறுப்புடனும், சுகாதாரத்துடனும் செயல்பட வேண்டிய கட்டாயத்தையே இந்தச் சம்பவம் நமக்கு நினைவூட்டுகிறது. உணவின் ருசியை விட, அதன் பாதுகாப்பே முதன்மையானது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
Read More : செம குட் நியூஸ்..!! தமிழ்நாட்டில் இனி 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது..!!
Leave a Reply