ஒரு மாதம் அரிசி சாதம் சாப்பிடாமல் இருந்தால் என்ன ஆகும்..? உடலில் சத்துக் குறைபாடு ஏற்படுமா..? என்பது குறித்து இந்தப் பதிவில் தெளிவாக பார்ப்போம்.
இந்தியா உள்பட பல நாடுகளில் அரிசி தான் பிரதான உணவாக இருக்கிறது. அரிசியை பொறுத்தவரை பாஸ்மதி, சீரக சம்பா உள்ளிட்ட ஏராளமான வகைகள் உள்ளன. இந்த அரிசி தான் பலருக்கும் இங்குப் பிரதான உணவாக உள்ளது. இதில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் இருப்பதால், விரைவான எனர்ஜியையும் வயிறு முழுமையான உணர்வையும் அளிக்கின்றன.
இந்தக் காலத்தில் உடல் பருமன் என்பது பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இதனால், பலரும் கார்போஹைட்ரேட் கொண்ட அரிசியை ஒதுக்க ஆரம்பித்துள்ளனர். சரி ஒருவர் ஒரு மாதத்திற்கு அரிசி சாதம் சாப்பிடாமல் இருந்தால், உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் அதிதி பிரபு அளித்துள்ள பேட்டியில், “நாம் சாப்பிடும் அரிசி பெரும்பாலும் பாலிஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசி. இதில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் இருக்கிறது. ஆனால், ஊட்டச்சத்துக்கள் மிகக் குறைவாகத்தான் உள்ளது.
அரிசியை தவிர்த்தால் என்ன ஆகும்..?
அரிசி சாதம் சாப்பிடாமல் இருந்தால், ஆரம்பத்தில் உடலுக்குத் தேவையான எனர்ஜி பாதிக்கும். பசி அதிகரிக்கும். ஆனால், அது மெட்டபாலிசத்தை பாதிக்காது. இந்தப் பாதிப்பு குறுகிய காலம் மட்டுமே இருக்கும். பிறகு கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்புகள் அடங்கிய சமச்சீர் உணவு எடுத்துக்கொண்டால், அனைத்து சிக்கலும் சீராகிவிடும்” என்று தெரிவித்துள்ளார்.
ஒரு மாதத்திற்கு அரிசியை முழுமையாக தவிர்த்தால், ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுமா? என்பது பலரது கேள்வியாக இருக்கிறது. ஆனால், அரிசியைத் தவிர்ப்பது முக்கிய குறைபாடுகளை ஏற்படுத்தாது என்று நிபுணர் அதிதி விளக்கம் அளித்துள்ளார்.
வேறு என்ன சாப்பிடலாம்..?
அரிசிக்கு பதிலாக ராகி உள்பட சிறுதானியங்கள், முழு கோதுமை, பார்லி, ஓட்ஸ் மற்றும் இனிப்பு உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு போன்ற காய்கறிகளை அளவோடு சாப்பிடலாம். இதில் சிறந்த கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புகள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளன.
ஆனால், சர்க்கரை பாதிப்பு அதிகம் இருப்போர் பாலிஷ் செய்யப்பட்ட அரிசியைச் சாப்பிடக் கூடாது. உணவின் சமச்சீர் சத்துகள் இல்லாமல் போனால் அரிசி நமது உடலில் இருக்கும் சர்க்கரை அளவை உயர்த்திவிடும். எனவே, அதற்குப் பதிலாகச் சர்க்கரை நோய் இருப்போர் பாலிஷ் செய்யப்படாத அரிசியுடன் காய்கறிகள் மற்றும் தரமான புரதத்துடன் சேர்த்து, சரியான அளவில் சாப்பிடலாம். இது ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவும்” என்றார்.
பொறுப்புத் துறப்பு : மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் மருத்துவ நிபுணரின் தனிப்பட்ட கருத்துக்களாகும். இவற்றின் உண்மைத் தன்மையை Tamil Xpress இணையதளம் உறுதிப்படுத்தவில்லை.
Read More : நீங்கள் விரும்பி சாப்பிடும் தக்காளி கெட்ச் அப் எவ்வளவு ஆபத்தானது தெரியுமா..? என்னென்ன கலக்கப்படுகிறது..?