சென்னையில் அன்றாடம் டீ, காஃபி குடிக்கும் மக்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கூடுதல் செலவுக்காக தயாராக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்கனவே உயர்ந்து மக்கள் பெரும் பொருளாதார சுமையை அனுபவித்து வரும் நிலையில், இப்போது டீ மற்றும் காஃபியின் விலை உயர உள்ளது.
சென்னை மாநகரில் இயங்கும் டீக்கடை வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, செப்.1ஆம் தேதி முதல் டீ ஒரு கிளாஸுக்கு ரூ.15 என்றும், காஃபி ஒரு கிளாஸுக்கு ரூ.20 என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை டீ ரூ.12-க்கும், காஃபி ரூ.15-க்கும் விற்கப்பட்டு வந்தது.
புதிய விலைப்பட்டியல் நடைமுறையில் வரும் தகவலை உறுதிப்படுத்தும் வகையில், பல டீக்கடைகளில் அறிவிப்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. விலை உயர்வுக்கு காரணமாக, பால், டீ தூள் மற்றும் காஃபி தூள் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை தொடர்ச்சியாக உயர்வு, கூடுதலாக போக்குவரத்து செலவுகளும் உயர்ந்துள்ளதால், டீ மற்றும் காஃபி விலை உயர்த்தப்பட்டுள்ளதாக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
Read More : நமது உடலில் இந்த உறுப்புகள் இல்லை என்றாலும் உயிர் வாழலாம்..!! பலருக்கும் தெரியாத தகவல்..!!