மத்திய அரசு துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்பி வரும் பணியாளர் தேர்வு ஆணையம் (Staff Selection Commission – SSC), தற்போது நாட்டின் மத்திய பாதுகாப்புப் படைகளில் (Central Armed Police Forces) காலியாக உள்ள கான்ஸ்டபிள் (GD) பணியிடங்களுக்கான பிரம்மாண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற கனவுடன் காத்திருக்கும் லட்சக்கணக்கான தேர்வாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் விதமாக, மொத்தம் 25,487 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பணியிடங்கள் :
மத்திய அரசின் பல்வேறு பாதுகாப்புப் பிரிவுகளான BSF, CISF, CRPF, SSB, ITBP, AR, SSF ஆகியவற்றில் உள்ள கான்ஸ்டபிள் (GD) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
படை பிரிவு மற்றும் காலியிடங்கள் :
CISF – 13,135
CRPF – 5,366
BSF – 5,24
SSB – 1,764
AR – 1,556
ITBP – 1,099
SSF – 23
சம்பளம்: மத்திய அரசின் 7வது ஊதியக் குழுவின்படி, தேர்ந்தெடுக்கப்படும் தேர்வர்களுக்கு ரூ. 21,700 முதல் ரூ. 69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
வயது வரம்பு: 01.01.2026 தேதியின்படி 18 வயது முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். (விண்ணப்பதாரர்கள் 01.01.2003-க்கு முன்போ, 01.01.2008-க்குப் பிறகோ பிறந்திருக்கக் கூடாது.)
வயது வரம்பு தளர்வுகள்: SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் (28 வயது வரை), OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் (26 வயது வரை) என அரசு விதிமுறைகளின்படி வயது வரம்புத் தளர்வுகள் அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
தேர்வு முறையானது, கணிணி வழித் தேர்வு (CBE), உடல் தகுதித் தேர்வு (PST), உடல் திறன் தேர்வு (PET), மருத்துவப் பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமையும்.
தேர்வு மையங்கள்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் கணிணி வழித் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ. 100 செலுத்த வேண்டும். பெண்கள், SC/ST மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: டிசம்பர் 31, 2025 கடைசி நாளாகும்.
தேர்வு நடைபெறும் மாதம்: 2026 பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ள தேர்வர்கள் கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகளை அறிய, SSC-யின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து உறுதி செய்துகொள்ளலாம்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: Click here
Read More : தவெகவில் இணையும் 2 ஆளுங்கட்சி அமைச்சர்கள்..!! சவால் விட்ட ஆதவ் அர்ஜுனா..!! அச்சத்தில் திமுக தலைமை..!!











