பிரதமர் மோடி தனது நாடாளுமன்றத் தொகுதியான உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசிக்கு வருகை தந்து, சுமார் ரூ.2,183.45 கோடி மதிப்புள்ள 52 வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். மேலும், பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதியின் 20-வது தவணையையும் விடுவித்தார்.
விவசாயிகளுக்கு இதுவரை 19 தவணைகளாக பிஎம் கிசான் திட்டத்தில் பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில், 20-வது தவணையாக 2 ஆயிரம் ரூபாய் தற்போது விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு பல்வேறு நலத்திட்ட உதவிகளும், மானியம், நிதியுதவி திட்டங்களும் அறிவிக்கப்பட்டு, ஜன் தன் வங்கி கணக்குகள் மூலமாக நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
பணம் பெறும் விவசாயிகள் பிஎம் கிசான் திட்டத்தின் https://pmkisan.gov.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தங்களின் நிலையை தெரிந்து கொள்ளலாம். மேலும், உங்கள் ஆதார் எண் அல்லது பிஎம் கிசான் திட்ட எண்ணை கொடுத்து உங்களது தரவுகளை பெற்றுக் கொள்ளலாம்.
அதேபோல், ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் கூகுள் பிளே ஸ்டோரில் பிஎம் கிசான் செயலியை டவுன்லோடு செய்து, அதில் ஆதார் எண்ணை பதிவிட்டு, ஓடிபியை உள்ளீடு செய்து டேஷ் போர்டில் பயனாளிகள் நிலை குறித்து அறிந்து கொள்ளலாம். அதேபோல், விவசாயிகள் தங்கள் மொபைல் எண் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் சரியாக உள்ளதா என்பதையும் சரிபாத்துக் கொள்ள முடியும்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு இன்று தான் முதல் முறையாக காசிக்கு வந்துள்ளேன். ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தபோது 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அவர்களது குடும்பங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வலியையும், மகள்களின் வேதனையையும் கண்டு, என் இதயம் துக்கத்தால் நிறைந்துபோனது.
இன்று, பிஎம் கிசான் சம்மன் நிதியின் தவணை காசியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. காசியில் இருந்து பணம் செல்லும்போது, அது தானே பிரசாதமாக மாறுகிறது. விவசாயிகளின் கணக்குகளில் 21 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
Read More : உங்கள் வேலையை ஏஐ பறித்துவிடுமோ என்ற அச்சமா..? இந்த 5 திறன்களை கற்றுக்கொண்டால் போதும்..!!
Leave a Reply