திடீரென சாலையில் கவிழ்ந்த ஆம்னி பேருந்து.. 15-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்..

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள மின்னூர் பகுதியில், சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை ஒரு விபத்து ஏற்பட்டது. விஜயவாடாவில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி சென்ற ஒரு ஆம்னி பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணிக்காக சாலையின் ஓரத்தில் குவிக்கப்பட்டிருந்த மண் குவியல்கள் மீது ஏறியதில், பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த 15-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். காயம் அடைந்த பயணிகளை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மீட்டு, உடனடியாக சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஆம்பூர் கிராமிய போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கிரேன் உதவியுடன் கவிழ்ந்த ஆம்னி பேருந்தை சாலையில் இருந்து அகற்றினர்.

இந்த விபத்து காரணமாக சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More : ‘ராமர் பாலம் கட்ட பயன்படுத்திய கல்’ எனக் கூறி வசூல் வேட்டை..!! அதிரடியாக அகற்றிய அதிகாரிகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *