சிறந்த ஆரோக்கியம் மற்றும் பாரம்பரிய உணவுப் பழக்கங்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) புதிய பயிற்சி முகாமை ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில் நடைபெறும் இந்த பயிற்சி முகாம், தினை மற்றும் பரம்பரிய தானியங்களை கொண்டு பேக்கரி பொருட்கள் தயாரிப்பதற்கான முழுமையான அறிவையும், தொழில்முனைவோருக்கு தேவைப்படும் திறன்களையும் அளிக்கிறது.
செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை (மூன்று நாட்கள்), தினசரி காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள EDII அலுவலக வளாகத்தில் இந்த பயிற்சி நடைபெற உள்ளது.
பயிற்சியில் பங்கேற்பவர்கள், பாரம்பரிய தானியங்களை வைத்து வித்தியாசமான பேக்கரி தயாரிப்புகள் உருவாக்கும் முறைகளை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு பெறுகிறார்கள். இதில் பிஸ்கட் வகைகளாக கோதுமை வெண்ணெய் பிஸ்கட், தினை பால் பிஸ்கட், ஜீரா குக்கீகள், ராகி நட்ஸ், மல்டிமில்லட், கம்பு நெய், கருப்பு கவுனி பாதாம், ஓமம் மற்றும் பிரவுனி வகைகள் ஆகிய பலவகையான ஆரோக்கியத்துடன் கூடிய வகைகள் செய்முறைபூர்வமாக கற்றுத்தரப்படும்.
பிறகு, கேக் மற்றும் ரொட்டி வகைகளாக ராகி சாக்லேட் கேக், தினை வாழை கேக், சோளம் – கேரட் – இலவங்கப்பட்டை கேக், முழு கோதுமை மற்றும் மல்டிமில்லட் ரொட்டி வகைகள், பால் ரொட்டி ஆகியவற்றும் தயாரிக்கும் முறைபாடுகள் பயிற்சியின் ஒரு பகுதியாக உள்ளன.
இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் தொழில்முனைவோர் குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பாக 18 ஆண்டுகள் மேற்பட்டவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் பங்கேற்கும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் தங்கும் வசதி வழங்கப்படுகிறது.
பயிற்சியின் ஒரு பகுதியாக அரசு வழங்கும் தொழில்முனைவோர் உதவித்தொகைகள், மானியங்கள் மற்றும் தொழில் தொடங்குவதற்கான வழிகாட்டுதல்கள் பற்றிய விவரங்களும் வழங்கப்படும். பயிற்சி முடிவில் அரசு அங்கீகரித்த சான்றிதழும் வழங்கப்படும்.
மேலும் தகவல்களுக்கு மற்றும் முன்பதிவிற்காக www.editn.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம். நேரடி தொடர்புக்கு, கீழ்க்கண்ட முகவரியில் அல்லது தொலைபேசி எண்களில் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை அணுகலாம்.
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032. தொலைபேசி எண்கள்: 86681 02600 / 70101 43022.
Read More : டீ – காஃபி பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்..!! நாளை முதல் விலை அதிரடி உயர்வு..!!