HCL நிறுவனம் ஆனது இந்தியாவில் உள்ள ஒரு பிரபல தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் ஆரம்பத்தில் கணினி தயாரிக்கும் நிறுவனம் என்ற முறையில் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், இன்று உலகம் முழுவதும் தொழில்நுட்ப சேவைகள் வழங்கும் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக உருமாறியிருக்கிறது.
தற்போது, HCL நிறுவனம் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் மொத்தம் 2.3 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மென்பொருள் சேவைகள், தகவல் தொழில்நுட்ப ஆலோசனை, இணையம், சர்வர் போன்ற தகவல் அமைப்புகளை பராமரித்தல், புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் ஆராய்ச்சி போன்ற பணிகளை இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தான், HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில், ஓடிசி கலெக்சன் (OTC Collections) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள், ODC கலெக்சன் (Cash Collection), கணக்கு மேலாண்மை (Account Management), வாடிக்கையாளர் தொடர்பு மேம்பாடு (Customer Relationship Management), கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்குமுறை பின்பற்றல் (Control & Compliancy) உள்ளிட்ட முக்கியமான பொறுப்புகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
இந்த வேலை, சுழற்சி அடிப்படையிலானது என்பதால், அனைத்து ஷிப்ட்களிலும் பணியாற்றும் நிலையை கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக, நைட் ஷிப்டில் (Night Shift) பணியாற்ற வேண்டும். ஒரு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி இருக்கும். இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்படும். இது சுழற்சி அடிப்படையில் மாறுபடும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், கட்டாயமாக ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். குறிப்பாக, ODC கலெக்சன் பணம் வசூல் தொடர்பான பணிகளில் நல்ல அறிவும், அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். ODC கலெக்சன் பணியில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரையிலான பணி அனுபவம் இருக்க வேண்டும்.
இந்த பணிக்கான நேர்முகத் தேர்வு (Interview) சென்னை நாவலூரில் வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை 10.00 மணி முதல் மதியம் 2.30 மணி வரை நடைபெற உள்ளது. நேர்முகத் தேர்வில் பங்கேற்க விரும்பும் நபர்கள், ETA 3 – HCL Navalur Block 1, Sandhya Infocity, OMR, Rajiv Gandhi Salai, Navalur, Chennai, Tamil Nadu – 600130 என்ற முகவரிக்கு நேரில் வரவேண்டும்.
இந்த நேர்முகத் தேர்வுக்கு வருவோர், 2 ரெசியூம் மற்றும் 2 வகையான ID Proofs (அடையாள அட்டை) எடுத்துச் செல்ல வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள், சென்னை நாவலூரில் உள்ள அலுவலகத்தில் நியமனம் செய்யப்படுவார்கள். தற்போதைய அறிவிப்பின் பணிக்கான சம்பளம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. கடைசி கட்ட இண்டர்வியூவில் இதுகுறித்து தெரிவிக்கப்படும். எனவே, தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.linkedin.com/jobs/view/4279576890/?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
Read More : கொழுந்தியாள் கொடுத்த பரபரப்பு புகார்.. நொந்துபோன முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்.. கடைசியில் நடந்த சோகம்..
Leave a Reply