இன்றைய இணைய உலகில் குழந்தைகள் படிக்கும்போதும், ஓய்வெடுக்கும் நேரத்திலும், தூங்கும் முன் சில நிமிடங்களுக்கும் செல்போன் டேப்லெட், டிவி, லேப்டாப் ஆகியவை அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாதவையாக மாறிவிட்டன. ஆனால், இந்த நவீன வசதிகளுக்குப் பின்னால், அவர்கள் உடலை பாதிக்கும் ஆபத்தும் வளர்ந்து வருகிறது என்பது உங்களுக்கு தெரியுமா..?
சீனா, ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பள்ளி மாணவர்களை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குழந்தைகள் அதிக நேரம் ஸ்கிரீன் முன்னே அமர்ந்திருப்பதாலோ, தவறான உடல் நிலைமையில் சாதனங்களைப் பயன்படுத்துவதாலோ, கழுத்து மற்றும் முதுகு எலும்புகளில் தீவிரமாக தேய்மானம் ஏற்படுவதைக் கண்டறிந்துள்ளனர்.
மேலும், பள்ளிக்கு அதிக எடை கொண்ட புத்தக பைகளை கொண்டுச் செல்வதும் இந்தப் பாதிப்புக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. குழந்தைகள் தொடர்ந்து ஒரு மணி நேரம் செல்போனை பயன்படுத்தினால், அவர்களின் முதுகு மற்றும் கழுத்து எழும்புகள் 8 பலவீனமடைவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதே ஆய்வில் வெளியான மற்றொரு அதிர்ச்சியான தகவல் என்னெவென்றால், முன்பு 60 வயதில் மட்டுமே வரும் எலும்பு தொடர்பான தேய்மானங்கள், இன்று சிலருக்கு 30 வயதிலேயே ஆரம்பித்துவிட்டதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கணினி, கைபேசி, டிவி ஆகியவை குழந்தைகளின் உடல் வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, அடுத்த தலைமுறையின் உடல் அமைப்பு பழைய தலைமுறையில் இருந்தே மாறும் அபாயம் உள்ளது என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
அதேபோல் நம்மில் பெரும்பாலோர் கவலைப்படுவது, மொபைல் அல்லது டேப்லெட் பார்ப்பதால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றிதான். ஆனால், சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் அதைவிட பல மடங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எதிர்காலத்தில் கண் பிரச்சனைகளை விட, எலும்பு தொடர்பான உடல் நலக் குறைகள் தான் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
முக்கியமாக குழந்தைகளின் முதுகு, கழுத்து, முதுகுத்தண்டு, முழங்கால் போன்ற பகுதிகளில் தேய்மானம் ஏற்படுவது, திடீரென இயலாமைகள் உருவாகச் செய்யும் என்கிறார்கள். இந்த உடல் பாதிப்போடு சேர்ந்து தூக்கமின்மை, ஒருசில நேரங்களில் தனிமை உணர்ச்சி, மன அழுத்தம், கவனக்குறைவு போன்ற மனநலப் பிரச்சனைகளும் அதிகரித்து வருவதாகவே மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்குச் செய்யக்கூடிய மிகப் பெரிய நல்லதொரு செயல் என்னவென்றால், நீங்கள் செல்போன் பார்க்கும் பழக்கத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். உணவுக்கோ, ஓய்வுக்கோ, உறக்கத்துக்கு முன்போ செல்போன் பார்ப்பதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும்.
மற்றவர்களுடன் பேசும் நேரமும், இயற்கையை ரசிக்கும் நேரமும் குறைந்துவிட்டது. பிள்ளைகள் ஓடிக் கொண்டாடும் வெளியுலகம் ஸ்கிரீன் கிளாஸ் வழியே மட்டும் தெரியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இவ்வாறு தொடர்ந்து டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தும் பழக்கம், குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் உடல்நலக் குறைபாடுகளாக மாறிக் கொண்டிருக்கிறது.
செல்போன், லேப்டாப் ஆகியவை தொடர்ந்து குனிந்தபடியே பார்த்தால், தலையின் இயல்பான அமைப்பே மாறி விடக்கூடும். இதன் விளைவாக, கழுத்து வலி, தலைவலி, தோள்பட்டை வலி, கை சளைக்கை வலி, முதுகுத் தண்டுவட வலி போன்றவை வரும்.
எந்த வயதினருக்கு எவ்வளவு ஸ்கிரீன் டைம்..?
➥ 0 முதல் 2 வயது குழந்தைகளுக்கு மொபைல், டிவி தேவையில்லை
➥ 2 முதல் 5 வயது குழந்தைகளுக்கு அதிகபட்சம் 1 மணி நேரம் (பெற்றோர் கண்காணிப்புடன்)
➥ 5 முதல் 15 வயது குழந்தைகளுக்கு அதிகபட்சம் 2 மணி நேரம் (பயனுள்ள தகவல்களுக்கு மட்டும்)
Read More : கணவன் – மனைவி போல் ஒன்றாக வாழ்ந்த 2 சிறுமிகள்..!! பெற்றோருக்கு பயந்து வீட்டை விட்டு ஓட்டம்..!!