தமிழ்நாடு அரசு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தாட்கோ (TAHDCO) திட்டங்களுக்கு இனி எளிதாக விண்ணப்பிக்க புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை தாட்கோ இணையதளம் மற்றும் மாவட்ட மேலாளர் அலுவலகம் வழியாக மட்டுமே விண்ணப்பித்து வந்த நிலையில், தற்போது அரசின் இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தாட்கோ நிறுவனம், முதலமைச்சரின் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் (CM-ARISE), நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் மற்றும் PM-AJAY போன்ற பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்களின் கீழ் மானியத்துடன் கூடிய கடன் உதவிகளைப் பெற விரும்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள், இனி தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள இ-சேவை மையங்களுக்குச் சென்று எளிதாக விண்ணப்பிக்க முடியும் என தாட்கோ மேலாண்மை இயக்குநர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சியானது, விண்ணப்ப நடைமுறையை மேலும் எளிதாக்கி, உரியவர்களுக்கு அரசின் திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தகுதியுள்ள அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் விண்ணப்பித்து, தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Read More : அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை..!! இனி இவர்களும் விண்ணப்பிக்கலாம்..!! உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு..!!