உங்கள் வாகனத்தின் ஆர்சி புக் தொலைந்துவிட்டதா..? ஆன்லைனில் சுலபமாக விண்ணப்பிப்பது எப்படி..?

RC Book என்பது Registration Certificate ஆகும். இது ஒரு வாகன பதிவு சான்றிதழ். நீங்கள் ஒரு வாகனத்தை (பைக், கார், வேன்) வாங்கியதும், அந்த வாகனத்தை அரசின் போக்குவரத்துத் துறையில் பதிவு செய்து பெறும் முக்கிய ஆவணம் தான் ஆர்சி புக்.

ஆர்சி புக்கில் உள்ள விவரங்கள் :

வாகன பதிவு எண்

➥ வாகன உரிமையாளரின் பெயர்

➥ எஞ்சின் எண் மற்றும் சேசியஸ் எண்

➥ வாகனத்தின் மாடல்

➥ வாகன நிறுவனத்தின் விவரம்

➥ முகவரி போன்ற விவரங்கள் இருக்கும். RC புக் இல்லாமல் சாலையில் வாகனம் ஓட்டுவது என்பது சட்டப்படி குற்றமாகும்.

ஆர்சி புக் தொலைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்..?

➥ ஆர்சி புக் தொலைந்துவிட்டால், அதை மீண்டும் பெறுவதற்கு சில விதிமுறைகள் உள்ளன.

➥ நீங்கள் ஆர்சி புக்கை எங்கு, எப்போது தொலைத்தீர்கள் என்பதை குறிப்பிடும் வகையில், உங்கள் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் எஃப்.ஐ.ஆர். அல்லது சிஎஸ்ஆர் பதிவு செய்ய வேண்டும்.

➥ போலீசில் புகார் அளித்தப் பிறகு, CSR அல்லது FIR நகலை மறக்காமல் பெற்றுக் கொள்ளுங்கள். ஏனென்றால், இது பதிவுத்துறையில் தேவைப்படும்.

➥ பிறகு, உங்கள் வாகனம் பதிவு செய்யப்பட்ட ஆர்டிஓ அலுவலகத்திற்கு செல்ல வேண்டும்.

➥ அங்கு Form 26 எனப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இது Duplicate RC Book கோரும் விண்ணப்பம் ஆகும்.

தேவையான ஆவணங்கள் :

➥ காவல்துறை கொடுத்த FIR அல்லது CSR நகல்

➥ Form 26 (விண்ணப்பம்)

➥ வாகன உரிமையாளரின் அடையாள அட்டை (ஆதார், பான், டிரைவிங் லைசன்ஸ்)

➥ வாகனத்தின் இன்சூரன்ஸ் காப்பீட்டு நகல்

➥ மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ் (PUC)

➥ வாகன பதிவுக்கான வரி கட்டப்பட்டதை நிரூபிக்கும் சான்றுகள்

➥ உரிய கட்டணத்துடன் செலுத்தப்பட்ட ரசீது

➥ Duplicate RC Book பெற சிறிய தொகை செலுத்த வேண்டியிருக்கும். அது ஆர்டிஓ அலுவலகத்திலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி..?

➥ முதலில் Parivahan.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.

➥ முகப்புப் பக்கத்தில் Online Services > Vehicle Related Services என்ற ஆப்ஷன் இருக்கும். அதை தேர்வு செய்யவும்.

➥ பிறகு நீங்கள் எந்த மாநிலம் என்பதை தேர்வு செய்யவும்.

➥ பின்னர், RC Services பட்டியில் இருந்து Duplicate RC என்பதை தேர்வு செய்து, Login/Register செய்யவும். (புதிய பயனராக இருந்தால் பதிவு செய்யவும்)

➥ உங்கள் வாகனத்தின் Registration Number மற்றும் Chassis Number (கடைசி 5 இலக்கங்கள்) ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.

➥ பின்னர், ஆதார் e-KYC செயல்முறையை உறுதிபடுத்த வேண்டும்.

➥ பின்னர், தேவையான விவரங்களை பூர்த்தி செய்து, ஆவணங்களை அப்லோடு செய்ய வேண்டும்.

➥ பிறகு, குறிப்பிட்ட கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தினால், உங்களுக்கு ஆர்சி புக் நகல் சில நாட்களில் வந்துவிடும்.

Read More : திடீரென சாலையில் கவிழ்ந்த ஆம்னி பேருந்து.. 15-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *