இந்தியன் வங்கி, கனரா வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை..!! மாதம் ரூ.64,000 வரை சம்பளம்..!!

இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட பொதுத்துறை வங்கிகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவில் அரசு பொதுத்துறை வங்கிகளில் காலியாகவுள்ள பணியிடங்கள் வங்கிப் பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. எஸ்பிஐ வங்கியை தவிர்த்து மற்ற வங்கிகள் அனைத்திலும் வங்கிப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் போட்டி தேர்வில் வெற்றி பெற்றால் போதுமானது.

இந்நிலையில்தான், தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது மாநில வாரியாக வாடிக்கையாளர் சேவை அசோசியேட்ஸ் (கிளர்க்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 10,277 காலியிடங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 897 பணியிடங்கள் உள்ளன. ஆந்திராவில் 367, கர்நாடகாவில் 1,170, கேரளாவில் 330, புதுச்சேரியில் 19 என மொத்தம் 10,277 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கல்வி தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

வயது வரம்பை பொறுத்தவரை 21.08.2025 அன்று 20 வயது முதல் 28 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது, 02.08.1997-க்கு முன்போ அல்லது 01.08.2005-க்கு பிறகே பிறந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியாது.

சம்பளம் எவ்வளவு..?

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை :

* முதன்மை தேர்வு (கொள்குறி வகை)

* மெயின் தேர்வு

தேர்வு மையங்கள் :

சென்னை, கோவை, சேலம், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், தஞ்சை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், விருதுநகர் ஆகிய நகரங்களில் அமைக்கப்படும்.

மெயின்ஸ் தேர்வுகள் சென்னை, கோவை, சேலம், மதுரை, நாமக்கல், திருச்சி, நெல்லை, வேலூர், விருதுநகர் ஆகிய நகரங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி..?

பொதுப்பிரிவு, ஓபிசி உள்ளிட்ட பிரிவினர் தேர்வுக் கட்டணமாக ரூ.850, எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினர் ரூ.175 செலுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். எனவே விருப்பமுள்ளவர்கள் 21.08.2025-க்குள் விண்ணப்ப வேண்டும். இப்பணிக்கான தேர்வு அக்டோபர் மாதம் நடைபெறும் என்றும் தேர்வு முடிவு நவம்பர் மாதம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்கள் : https://www.ibps.in/wp-content/uploads/DetailedNotification_CRP_CSA_XV_Final_for_Website.pdf?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH

Read More : எடப்பாடியில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..!! தமிழ் ஆசிரியர் போக்சோவில் கைது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *