நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியாக இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த வங்கியில் காலியாக உள்ள 1,500 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டில் 277 அப்ரெண்டீஸ் பயிற்சி காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
நாடு முழுவதும் மொத்தம் 1,500 அப்ரெண்டீஸ் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தமிழ்நாட்டில் 277, புதுச்சேரியில் 9, தெலங்கானா 42, குஜராத் 35, கர்நாடகா 42, கேரளா 44, ஆந்திரா 82 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் டிகிரி முடித்திருக்க வேண்டும். 01.04.2021- க்கு முன்பாக டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை. மாநிலத்தின் உள்ளூர் மொழி தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
அதேபோல், 20 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். எஸ்சி/எஸ்டி உள்ளிட்ட பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் எவ்வளவு.?
மெட்ரோ / நகர்ப்புறங்களில் உள்ள வங்கி கிளைகளில் பணி அமர்த்தப்பட்டால் ரூ. 15,000 வழங்கப்படும். ஊரகம் மற்றும் சிறுநகரங்களில் பணி அமர்த்தப்பட்டால் ரூ. 12,000 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
ஆன்லைன் தேர்வு, உள்ளூர் மொழித்திறன் தேர்வு அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். ஆன்லைன் எழுத்து தேர்வு சென்னை, சேலம், மதுரை, நெல்லை, திருச்சி, வேலூர், கோவை, விருதுநகர், தஞ்சை உள்ளிட்ட நகரங்களில் நடைபெறவுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி.?
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.indianbank.in/ என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.800 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்சி பிரிவினர் வெறும் ரூ.175 செலுத்தினால் போதுமானது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை (ஆகஸ்ட் 7) கடைசி நாள் என்பதால், தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read More : HCL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு.. ஆகஸ்ட் 7ஆம் தேதி மிஸ் பண்ணிடாதீங்க..!!
Leave a Reply