படுக்கை அறையில் மனைவியுடன் இருந்த கணவன்..!! ஜன்னல் வழியே தெரிந்த உருவம்..!! தருமபுரியில் ஷாக் சம்பவம்

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் 27 வயது இளைஞர். இவருக்கு திருமணமான நிலையில், தனது மனைவியுடன் இரவு வழக்கம்போல ஒன்றாக இருந்துள்ளார். அப்போது, ஜன்னல் வழியாக ஒருவர் செல்போன் மூலம் இதை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது, கண்ணில் ஏதோ வெளிச்சம் பட்டதால், திடுக்கிட்டு எழுந்த இளைஞர், வீட்டின் வெளியே சென்று பார்த்துள்ளார். அப்போது, அங்கிருந்து ஒருவர் பதறியடித்து ஓடியுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர், உடனே வீட்டின் அருகே இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துள்ளார்.

அப்போது, படம் பிடித்த நபர் பாலக்கோட்டை சேர்ந்த கார்த்திக் (36) என்பது தெரியவந்தது. இதுபற்றி கார்த்திக்கிடம் சென்று அந்த இளைஞர் கேட்டுள்ளார். மேலும், அவரின் செல்போனை வாங்கி பரிசோதித்து பார்த்தபோது, அதில் இளைஞரின் படுக்கை அறையை படம் பிடித்த காட்சிகள் இருந்தது.

இதைப் பார்த்து அந்த இளைஞர் அதிர்ச்சி அடைந்தார். அப்போது, இதுபற்றி வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் அப்படி சொன்னால், அந்த வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டு விடுவேன் என்றும் அந்த இளைஞரை கார்த்திக் மிரட்டியுள்ளார்.

ஆனால், அந்த இளைஞர் பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவர் நிலத்தரகர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Read More : செல்போன் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு வரும் புதிய ஆபத்து..!! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..!!