Google முதல் Vivo வரை..!! ஆகஸ்ட் மாதம் வெளியாகும் அதிரடி ஸ்மார்ட்போன்கள்..!! விலை எவ்வளவு..?

இந்தாண்டு ஆகஸ்ட் மாதம், ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும் சலுகைகள் மட்டும் அல்ல. பல புதிய ஸ்மார்ட்போன் அறிமுகங்களுக்கும் முக்கியமான காலமாக அமைந்துள்ளது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய முன்னணி இ-காமர்ஸ் தளங்கள், தங்களது “2025 சுதந்திர தின சிறப்பு விற்பனைகள்” குறித்த தேதிகளை ஏற்கனவே அறிவித்துள்ளன. இது ஒரு பக்கம் இருந்தாலும், ஆகஸ்ட் மாதத்தில் பல பிரபல நிறுவனங்கள் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளன.

அந்த வகையில், இம்மாதம் எந்தெந்த நிறுவனங்கள் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளன..? எப்போது அறிமுகமாகும்..? என்னென்ன அம்சங்கள்..? விலை எவ்வளவு..? என்பது குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

Google Pixel 10 Series :

கூகுள் நிறுவனம் ஆகஸ்ட் 20 ஆம் தேதி பிக்சல் 10 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது.

மாடல்கள் : Pixel 10, 10 Pro, 10 Pro XL, Pixel 10 Pro Fold (foldable) 

செயல்திறன் : Tensor G5 (TSMC 3nm), Android 16, 12‑16 GB RAM 

கேமரா :

Pixel 10: 50MP + 12MP ultra-wide + 10‑10.8MP periscope

Pro/XL: 50MP + 48MP ultra-wide + 48MP telephoto

Fold: 48MP main + ultra-wide/telephoto + dual front cameras 

விலை : Pixel 10 ரூ.79,999 முதல் ரூ.90,000; Pro XL ரூ.1,17,700; Fold ரூ.1,79,999 

முக்கிய அம்சங்கள் : ஒயர்லெஸ் மற்றும் ஒயர் ஷார்ஜிங், Wi‑Fi 6E, UWB, 7 ஆண்டுக்கான OS & பாதுகாப்பு மேம்பாடுகள் 

Vivo V60

வெளியீட்டு தேதி : ஆகஸ்ட் 12 

செயலி & RAM : Snapdragon 7 Gen 4, 6,500 mAh பேட்டரி, 90W வேக சார்ஜிங் 

காட்சி : 6.67″ 120Hz AMOLED, 1.5K, IP68/69

கேமரா : Zeiss-branded triple: 50MP primary + 8MP ultra-wide + 50MP periscope (3× optical) + 50MP selfie 

விலை : ரூ.37,000 முதல் ரூ.40,000 வரை

Oppo K13 Turbo Series 5G

வெளியீட்டு சுமார் தேதி : ஆகஸ்ட் 15 முதல் 20ஆம் தேதிக்குள்

மாடல்கள் : K13 Turbo (Dimensity 8450) & Turbo Pro (Snapdragon 8s Gen 4) 

முக்கிய அம்சங்கள் : 6.8″ 120 Hz AMOLED, 7,000 mAh பேட்டரி, 80W சார்ஜிங், கட்டுப்படுத்தும் internal fan, 50 MP dual rear camera 

விலை : ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை

Vivo Y400 5G

வெளியீட்டு தேதி : ஆகஸ்ட் 4

அம்சங்கள் : 6.67″ FHD+ 120 Hz AMOLED, MediaTek Dimensity 7300 (or 4 Gen 2), IP68/69, 6,000 mAh பேட்டரி, 90W சார்ஜ் 

கேமரா : 50MP rear Sony IMX852 + AI, selfie – 16MP 

விலை : ரூ.24,999 முதல் ரூ.26,999 வரை

Redmi 15C

வெளியீட்டு தேதி : ஆகஸ்ட் மாதம்

அம்சங்கள் : 6.9″ இன்ச், 120 Hz LCD, Helio G81, 50MP rear + 16MP selfie, 6,000 mAh with 33W சார்ஜ், NFC & IP64 

விலை : ரூ.15,000-கீழ் 

Read More : இந்தியன் வங்கி, கனரா வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை..!! மாதம் ரூ.64,000 வரை சம்பளம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *