பெரும்பாலானோருக்கு மிளகாய் என்றால் உணவின் காரத்திற்கு மட்டுமே பயன்படுகிறது என்ற எண்ணம் இருக்கலாம். ஆனால், உண்மையில் இந்த இந்த மிளகாய், நம் உடலுக்கு தேவையான பல முக்கிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.
சமையலறையில் காரத்தை கூட்டும் ஒரு பொருளாகவே பார்க்கப்படும் மிளகாய், செரிமானத்தில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தி வரை பயன்படுகிறது. குறிப்பாக சிவப்பு மிளகாயில் மணமும், சுவையும் மட்டுமல்லாமல் ஆரோக்கியச் சக்திகளும் அடங்கியிருக்கின்றன.
சமையலில் மிக முக்கியமான இடம் பிடிக்கும் சிவப்பு மிளகாய், உணவுக்கு நிறத்தையும், சுவையையும் தருகிறது. ஆனால் அதைவிட இதில் வைட்டமின்கள் A, C, B6 மற்றும் K ஆகியவை உள்ளன. அமெரிக்க தேசிய மருத்துவ நூலகம் வெளியிட்ட தகவலின்படி, வைட்டமின் A கண்களின் ஆரோக்கியம், தோல் பராமரிப்பு, உடலின் செல்கள் மற்றும் உறுப்புகளின் சீரான செயல்பாடு ஆகியவற்றுக்கு அத்தியாவசியமாகும். ஒரு டீஸ்பூன் மிளகாய்ப்பொடி தினமும் உணவில் சேர்ப்பது, இந்த வைட்டமின் குறையை தடுக்கும்.
* வைட்டமின் C – உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. சளி, இருமல் போன்ற தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது.
* வைட்டமின் K – இரத்த ஓட்டம் மற்றும் எலும்புகள் வலுவடைவதற்காக முக்கியமானது.
* வைட்டமின் B6 – நரம்பியல் சீரான செயல்பாடு மற்றும் மூளைக்கான தூண்டுகோலாக செயல்படுகிறது.
மிளகாயில் காணப்படும் இயற்கை ரசாயனமான Capsaicin (கேப்சைசின்) தான், அதன் காரத்தை உருவாக்கும் அடிப்படை. ஆனால் இதுவே, ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த ஒரு சக்திவாய்ந்த சேர்க்கை என மருத்துவ உலகம் ஒப்புக்கொள்கிறது.
Capsaicin உடலின் வீக்கத்தை குறைத்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, செல்களில் ஏற்படும் சேதங்களை தடுக்கிறது. இது புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் போன்ற கடுமையான உடல்நலக் குறைபாடுகளுக்கு எதிரான ஒரு பாதுகாப்புக் கவசம் என கூறப்படுகிறது.
உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு மிளகாய் ஒரு வரப்பிரசாதம் என்று தான் சொல்ல வேண்டும். இது கலோரியை வேகமாக எரிக்கிறது. இதனால், உடல் எடை சீக்கிரமே குறையத் தொடங்கும். அதேபோல் செரிமானம் நன்றாக இருக்கும்.
அதிக காரத்தைத் தவிர்க்க விரும்புபவர்கள் கூட, தினசரி உணவில் ஒரு சிறிய அளவு மிளகாயைப் பயன்படுத்துவது, ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். இதில் நம்மால் விரும்பப்படும் சுவை மட்டும் இல்லாமல், நம் உடலுக்கும் தேவையான ஊட்டச்சத்துகளும் கிடைக்கின்றன. சரியான அளவில், தினசரி உணவில் மிளகாயைப் பயன்படுத்துவது, நம் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும், எடையை குறைக்கும், இதயநலம், செரிமானம் ஆகியவற்றுக்கு பலனளிக்கும் ஒரு இயற்கை மருந்து எனவே சொல்லலாம்.
பொறுப்புத் துறப்பு : மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் மருத்துவ நிபுணரின் தனிப்பட்ட கருத்துக்களாகும். இவற்றின் உண்மைத் தன்மையை Tamil Xpress இணையதளம் உறுதிப்படுத்தவில்லை.
Read More : நீங்கள் விரும்பி சாப்பிடும் தக்காளி கெட்ச் அப் எவ்வளவு ஆபத்தானது தெரியுமா..? என்னென்ன கலக்கப்படுகிறது..?