திருப்பதி திருமலைக்குள் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் இனி பாஸ்டேக் கட்டாயம் என்பது நடைமுறைக்கு வந்துள்ளது.
தென் இந்தியாவின் மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாகத் திகழும் திருமலை திருப்பதி தேவஸ்தானம், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது, இனி அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பொதுவாகவே, திருமலைக்கு செல்லும் பெரும்பாலான வாகனங்கள், அலிபிரி சோதனைச் சாவடி வழியாகவே பயணம் செய்கின்றன. இந்த சோதனைப் பகுதி, பண்டிகை காலங்கள் மற்றும் வார இறுதிகளில் பைக்குகள் முதல் பேருந்துகள் வரை நீண்ட வரிசையில் நின்று செல்லும்.
இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலைகள் முறைப்படி, அலிபிரி சோதனைச் சாவடியில் பாஸ்டேக் (FASTag) வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 15ஆம் தேதியான நேற்று முதல், இந்த சோதனைச் சாவடியில் செல்லும் அனைத்து வாகனங்களும் பாஸ்டேக் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும், அலிபிரி சோதனைச் சாவடியில், ஐசிஐசிஐ வங்கியின் உடனடி பாஸ்டேக் வழங்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் நேரில் சென்றால், பாஸ்டேக் வழங்கப்படும். பாஸ்டேக் இல்லாத வாகனங்கள், திருமலைக்கு அனுமதிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : செல்போன் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு வரும் புதிய ஆபத்து..!! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..!!