தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 334 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளன. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்களின் விவரம் :
ஈர்ப்பு ஓட்டுநர் : இந்தப் பணிக்கு 70 காலியிடங்கள் உள்ளன. 8ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், ஓட்டுநர் உரிமம் மற்றும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இவர்களுக்கு மாதம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். வயது வரம்பு 1.7.2025 தேதியின்படி 18 முதல் 32 வரை இருக்க வேண்டும்.
பதிவறை எழுத்தர் : இந்தப் பணிக்கு 30 காலியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு மாதம் ரூ.15,900 முதல் ரூ.58,500 வரை சம்பளம் வழங்கப்படும். வயது வரம்பு 18 முதல் 32 வரை இருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் : இந்தப் பணிக்கு 151 காலியிடங்கள் உள்ளன. 8ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். இவர்களுக்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
இரவுக் காவலர் : இந்தப் பணிக்கு 83 காலியிடங்கள் உள்ளன. தமிழில் எழுதத் தெரிந்திருந்தால் போதும். இவர்களுக்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் : பொது, பிசி, எம்பிசி பிரிவினர் ரூ.100, எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.50 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.9.2025.
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பதாரர்கள் ஊரக வளர்ச்சித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnrd.tn.gov.in/ மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு இணையதளத்தில் உள்ள அறிவிப்பை முழுமையாகப் பார்க்கவும்.
Read More : உணவில் அடிக்கடி காளான் சேர்த்துக் கொண்டால் உடலில் இந்த பிரச்சனையே வராது..!! இவ்வளவு நன்மைகளா..?