LIC-இன் இந்த திட்டத்தில் சேர்ந்தால் மாதம் ரூ.7,000 கிடைக்கும்.. பெண்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

எல்ஐசி (LIC) நிறுவனம் என்பது நாட்டின் மிக முக்கியமான ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் ஆயுள் காப்பீடு திட்டங்களை மட்டுமின்றி, ஆயுள் காப்பீட்டு முகவர்களாக பலருக்கும் வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுத்து வருகிறது. அந்த வகையில், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடிய ஒரு புதிய திட்டத்தை எல்.ஐ.சி. நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

இந்த திட்டத்தில் இணையும் பெண்கள் மாதம் ரூ.7,000 வரை வருமானம் ஈட்ட முடியும். இத்திட்டத்தின் பெயர் ”எல்ஐசி பீமா சகி யோஜனா” ஆகும். பெண்களுக்கு நிலையான மாத வருமானம் வழங்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைய விரும்பும் பெண்கள், 10ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

இத்திட்டத்தின் மூலம் முகவர்களாகும் பெண்களுக்கு மாதம் ரூ.7,000 வழங்கப்படும். இந்தியாவை சேர்ந்த எந்த பெண்கள் வேண்டுமானாலும், எல்ஐசி முகவராக மாறுவதற்கு விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு முதல் ஓராண்டு காலத்திற்கு ரூ.7,000 கிடைக்கும். முதல் ஆண்டில் இவர்கள் மூலம் எடுக்கப்படும் பாலிசிகளில் 65% பாலிசிகள் ஆக்டிவாக இருந்தால் இரண்டாம் ஆண்டில் மாதம் ரூ.6,000 கிடைக்கும். அதுவே மூன்றாவது ஆண்டில் ரூ.5,000 கிடைக்கும். இந்த ஊக்கத் தொகை போக உங்கள் மூலம் கிடைக்கும் பாலிசிகளுக்கு தனியாக போனஸ் தொகையும் கிடைக்கும்.

இந்த திட்டத்திற்கு 18 முதல் 70 வயதுக்கு உட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே எல்ஐசி ஏஜெண்ட்டுகளாக இருப்பவர்கள், எல்ஐசி ஊழியர்கள் மற்றும் அவர்களின் கணவன்/ மனைவி/குழந்தைகள்/பெற்றோர்/உடன் பிறந்தவர்கள், ஓய்வு பெற்ற எல்ஐசி ஊழியர்கள் உள்ளிட்டோர் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.

இத்திட்டத்தில் சேர எல்ஐசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். உங்களின் பெயர், முகவரி, 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதார் உள்ளிட்ட விவரங்கள் அதில் கேட்கப்படும். இதனை சரியாக உள்ளிட்ட பிறகு நீங்கள் இதற்கு தகுதி பெற்றவராக இருந்தால் தேர்வு செய்யப்பட்டு, காப்பீடு குறித்த பயிற்சியும் மாதந்தோறும் ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.

Read More : தமிழ்நாட்டில் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கு.. காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை.. விளாசிய எடப்பாடி பழனிசாமி…

English Summary :

Earn Rs 7,000 Monthly Under LIC’s Bima Sakhi Scheme for Women

Under the LIC Bima Sakhi Yojana, women will receive a fixed stipend of Rs 7,000 per month during the first year. However, the stipend will be entirely performance based.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *