உணவு சாப்பிட்ட உடனேயே நாம் செய்யும் சில தவறுகள், செரிமான மண்டலத்தை பாதித்து, பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுவது எவ்வளவு முக்கியமோ, அதேபோல சாப்பிட்ட பிறகு சரியான பழக்கங்களை கடைபிடிப்பதும் மிகவும் அவசியம். உணவுக்குப் பின் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
தண்ணீர் குடிப்பது
சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பது, செரிமான அமிலங்களின் சமநிலையைப் பாதிக்கும். இதனால் அஜீரணம், வாயுத்தொல்லை மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உணவுக்குப் பிறகு குறைந்தது 30 நிமிடங்கள் வரை காத்திருந்து தண்ணீர் அருந்துவது செரிமானத்திற்கு உதவும்.
சாப்பிட்டவுடன் தூங்குவது
உணவு சாப்பிட்டதும் படுத்துக்கொள்வது அல்லது தூங்குவது, செரிமான செயல்முறையை மெதுவாக்கும். இதனால் உணவு இரைப்பையில் சிக்கிக்கொண்டு, நெஞ்செரிச்சல் மற்றும் அமில ரிஃப்ளக்ஸ் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது உடல் பருமன் அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும். சாப்பிட்ட பின் சிறிது நேரம் மெதுவாக நடப்பது நல்லது.
புகைபிடித்தல்
உணவு சாப்பிட்டவுடன் புகைபிடிப்பது மிக ஆபத்தானது. மற்ற நேரங்களை விட, சாப்பிட்ட பின் புகைபிடிப்பது உடலுக்குப் பல மடங்கு தீங்கு விளைவிக்கும். இது புற்றுநோய், நுரையீரல் நோய்கள் மற்றும் செரிமானக் கோளாறுகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
டீ அல்லது காபி குடிப்பது
சாப்பிட்ட உடனேயே டீ அல்லது காபி அருந்துவது, உடலில் இரும்புச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதைத் தடுக்கும். குறிப்பாக, பெண்களுக்கு இது இரத்த சோகைக்கு வழிவகுக்கும். இந்த பானங்களை அருந்தும் பழக்கம் இருந்தால், சாப்பிட்ட பின் குறைந்தது ஒரு மணி நேரமாவது இடைவெளி விடுவது நல்லது.
உடற்பயிற்சி
சாப்பிட்டவுடன் கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது, செரிமான அமைப்புக்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டத்தைத் திசை திருப்பும். இதனால் வயிற்று வலி, வாந்தி, மற்றும் வாயுத் தொல்லை போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். உணவு உண்ட பிறகு ஒன்றரை முதல் இரண்டு மணி நேரத்திற்குப் பின் உடற்பயிற்சி செய்வது பாதுகாப்பானது.
பொறுப்புத் துறப்பு : மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் மருத்துவ நிபுணரின் தனிப்பட்ட கருத்துக்களாகும். இவற்றின் உண்மைத் தன்மையை Tamil Xpress இணையதளம் உறுதிப்படுத்தவில்லை.
Read More : இனி இவர்களின் குடும்பத்திற்கு ரூ.1,000 உரிமைத்தொகை வராது..!! வெளியான ஷாக்கிங் தகவல்..!!