சென்னையைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா மாதம்பட்டி ரங்கராஜ் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் மாதம்பட்டி ரங்கராஜ், தனது கேட்டரிங் மூலம் தனக்கென தனித்த இடத்தை உருவாக்கியவர். சுருதி என்பவரை திருமணம் செய்து கொண்ட மாதம்பட்டிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தான், ஜாய் கிரிசில்டா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மலர்ந்தது.
இதுதொடர்பாக சோசியல் மீடியாவில் ஜாய் கிரிசில்டாவும் மாதம்பட்டியும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டார். மேலும், சொகுசு கப்பல் ஒன்றில் இருவரும் தேனிலவு சென்றது போன்ற புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை சென்னையில் உள்ள ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாகவும், இருவரும் கணவன் – மனைவிபோல் குடும்பம் நடத்தி வந்ததால், நான் தற்போது 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக கூறி தன்னை திருமணம் செய்த மாதம்பட்டி, இப்போது என்னையும் விட்டு பிரிந்து சென்றுவிட்டதாக பரபரப்பு புகார் அளித்துள்ளார். எனவே, தன்னை ஏமாற்றிய மாதம்பட்டி ரங்கராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஜாய் கிரிசில்டா அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட போலீசாருக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Read More : பெண்களே.. மீண்டும் ஒரு வாய்ப்பு..!! இளஞ்சிவப்பு ஆட்டோ..!! இந்த தேதிக்குள் அப்ளை பண்ணிருங்க..!!