இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை பெரும் சவாலாக இருக்கும் நிலையில், AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி எதிர்கால வேலைவாய்ப்புகள் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சூழலில், தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (NHSRCL), பொறியியல் பட்டதாரிகளுக்கு ஒரு நல்ல வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்வு இல்லாமல், நேர்முகத் தேர்வு மூலம் மட்டுமே நிரப்பப்பட உள்ள இந்த 36 பணியிடங்களுக்கு நாடு முழுவதும் உள்ள தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிட விவரங்கள் :
உதவி தொழில்நுட்ப மேலாளர் : இந்தப் பதவிக்கு 18 காலியிடங்கள் உள்ளன. தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு மாதம் ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
இளநிலை தொழில்நுட்ப மேலாளர் : இந்தப் பதவிக்கு 18 காலியிடங்கள் உள்ளன. சம்பளமாக மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை வழங்கப்படும்.
இந்த இரண்டு பதவிகளுக்கும் விண்ணப்பிக்க, அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன்ஸ், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஆகிய பாடப்பிரிவுகளில் பி.இ./பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு மற்றும் விண்ணப்பக் கட்டணம் :
விண்ணப்பதாரர்கள் 21 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரையிலும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. பெண்கள், SC/ST மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. மற்றவர்கள் ரூ.400 செலுத்த வேண்டும்.
தேர்வு மற்றும் விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு இல்லை என்பது ஒரு பெரிய சிறப்பம்சமாகும். விண்ணப்பதாரர்கள், விண்ணப்பங்கள் பரிசீலனை, ஆவண சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் செப்டம்பர் 15, 2025 ஆகும். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.nhsrcl.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
Read More : மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை..!! விண்ணப்பிக்க ரெடியா..?