IGI Aviation Services என்பது இந்தியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஆகும். இது முக்கியமாக விமான நிலையங்களில் பணியாற்றுவதற்கான அங்கீகரிக்கப்பட்ட தரவுரிமை மற்றும் மனிதவள சேவைகளை வழங்குகிறது. இந்த நிறுவனம், பெரும்பாலும் விமான நிலையங்களில் உள்ள வெவ்வேறு நிறுவனங்களுக்கு (airlines, ground handling services, retail shops, hospitality sectors) பணியாளர்களை தேர்வு செய்து வழங்குகிறது.
இந்நிலையில் தான், இந்நிறுவனம் தற்போது 1,446 Airport Ground Staff மற்றும் Loaders பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே, இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பதவி : Airport Ground Staff (Male & Female)
காலியிடங்கள் : 1,017
கல்வித் தகுதி : 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (முன் அனுபவம் தேவையில்லை).
வயது வரம்பு : 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 30 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது.
சம்பளம் : மாதம் ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படும்.
பதவி : Loaders (Only Male)
காலியிடங்கள் : 429
கல்வித் தகுதி : 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
வயது வரம்பு : இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோரின் குறைந்தபட்ச வயது 20ஆக இருக்க வேண்டும்; அதிகபட்சமாக 40 வயதுக்குள் இருப்பது அவசியம்.
சம்பளம் : மாதம் ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
Airport Ground Staff பணிக்கு ரூ.350; Loaders பணிக்கு ரூ.250 செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யும் முறை :
Airport Ground Staff : Written Exam, Interview, Medical Test
Loaders : Written Exam, Medical Test
விண்ணப்பிப்பது எப்படி..?
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://igiaviationdelhi.com/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.09.2025
Read More : இன்ஸ்டா ரீல்ஸை அதிக நேரம் பார்த்தால் இந்த ஆபத்து வரும்..!! புதிய ஆய்வில் வெளியான ஷாக்கிங் தகவல்..!!












