தமிழ்நாடு அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் சொத்து விவரங்கள் குறித்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) நடத்திய ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது. இந்த ஆய்வு, 2021 சட்டமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களின் பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதிக சொத்துகளை கொண்ட டாப் 10 அமைச்சர்கள் யார் யார்..?
ஆர். காந்தி (கைத்தறி மற்றும் துணிநூல் துறை) : ரூ.47.94 கோடி சொத்துக்கள். 3 குற்ற வழக்குகள், அனைத்தும் தீவிரமானவை. கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு.
டி.ஆர்.பி. ராஜா (தொழில்துறை) : ரூ.41.81 கோடி சொத்துக்கள். 2 தீவிர வழக்குகள்.
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் : ரூ.38.89 கோடி சொத்துக்கள். 4 குற்ற வழக்குகள்.
துரைமுருகன் : ரூ.30.80 கோடி சொத்துக்கள். 8 குற்ற வழக்குகள், அதில் 2 தீவிரமானவை.
உதயநிதி ஸ்டாலின் (துணை முதல்வர்) : ரூ.29.07 கோடி சொத்துக்கள். 22 குற்ற வழக்குகள்.
எ.வ.வேலு : ரூ.23.32 கோடி சொத்துக்கள். 7 குற்ற வழக்குகள், அதில் 2 தீவிரமானவை.
சாமிநாதன் : ரூ.21.07 கோடி சொத்துக்கள். 3 குற்ற வழக்குகள், அதில் 2 தீவிரமானவை.
ரகுபதி : ரூ.15.32 கோடி சொத்துக்கள். 23 குற்ற வழக்குகள்.
முத்துசாமி : ரூ.13.68 கோடி சொத்துக்கள். 9 குற்ற வழக்குகள்.
சிவசங்கர் : ரூ.13.55 கோடி சொத்துக்கள். 46 குற்ற வழக்குகள், அதில் 7 தீவிரமானவை.
இந்த ஆய்வின்படி, தமிழக அமைச்சர்களில் 87% பேர் மீது குற்ற வழக்குகளும், 45% பேர் மீது தீவிர குற்ற வழக்குகளும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்தியாவிலேயே அதிக சொத்துக்களை வைத்துள்ள அமைச்சராக, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரசேகர் பெம்மாசானி ரூ.5,705 கோடி சொத்துக்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார்.
Read More : விடிஞ்சா கல்யாணம்..!! காதலியுடன் ஓட்டம் பிடித்த மணமகன்..!! கதிகலங்கிய கன்னியாகுமரி..!!